மேலும் அறிய

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் போக்சோவில் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற டிரைவரை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த 2 பேரை தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. திருமானூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் வேல்முருகன் (19). டூரிஸ்ட் வேன் டிரைவர். இவர் பாபநாசம் பகுதிக்கு கோயில்களுக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவது வழக்கம்.

அப்போது 10ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவிக்கும், வேல்முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி வழக்கம் போல் பக்தர்களை வேனில் வேல்முருகன் அழைத்து வந்துள்ளார். அப்போது அவருடன் அவரது நண்பர்களான பாப்பாநாட்டை சேர்ந்த வீரா, நாச்சியார்கோயில் அருகே திருச்சேறை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் கண்ணன் (57) ஆகியோரும் வந்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவியை சந்தித்த வேல்முருகன் வேனில் செல்லலாம் என்று அழைத்துள்ளார். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வேனை நிறுத்தி விட்டு வீரா, கண்ணன் ஆகியோர் உதவியுடன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி வேல்முருகனை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வேல்முருகன், மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த வீரா, கண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலி தொழிலாளி கைது

தஞ்சாவூர் அருகே தனது 10 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக 2வது கணவர் மீது மனைவி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மேலஉளூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை பிறந்த சில மாதங்களில் முதல் கணவரை விட்டு அந்த பெண் பிரிந்து விட்டார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கரைமீண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி வெற்றிசெல்வன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி தனது தாயுடன் அந்த 10 வயது சிறுமி படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி மறுநாள் காலை தனது தாயிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) கனிகா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெற்றிச் செல்வன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வெற்றிச்செல்வனை போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

குவாரிகளில் 6 வீல் லாரிகளுக்கு மணல் ஏற்ற மறுப்பா? நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
குவாரிகளில் 6 வீல் லாரிகளுக்கு மணல் ஏற்ற மறுப்பா? நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
ஹெல்மெட் போடலைன்னா பைன்... போட்டுக்கிட்டு வந்தா பஞ்ச் டயலாக்குடன் இன்ப அதிர்ச்சி கொடுத்த தஞ்சை போக்குவரத்து போலீஸ்
ஹெல்மெட் போடலைன்னா பைன்... போட்டுக்கிட்டு வந்தா பஞ்ச் டயலாக்குடன் இன்ப அதிர்ச்சி கொடுத்த தஞ்சை போக்குவரத்து போலீஸ்
திருப்பதிக்கு போகணுமா... தஞ்சாவூர் மக்களே உங்களுக்காக செம ஸ்வீட் நியூஸ் இதோ!!!
திருப்பதிக்கு போகணுமா... தஞ்சாவூர் மக்களே உங்களுக்காக செம ஸ்வீட் நியூஸ் இதோ!!!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Embed widget