மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள்... இறுதிப்பட்டியல் வெளியீடு

டிசம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயர் சேர்த்துக் கொள்ளும் பணிகள் நடைபெற்றன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள். ஆமாங்க இதுதான் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள விபரம். இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான ( எஸ்.ஐ.ஆர்) பணிகள் முடிந்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், ஆட்சேபக் கடிதம் அளித்து மீண்டும் பெயர் சேர்த்துக் கொள்ளும் பணிகள் நடைபெற்றன.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தஞ்சை மாவட்டத்திற்கான  இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம்  வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி  மாவட்டத்திலுள்ள 2496 வாக்குச்சாவடிகளில் 919973 ஆண் வாக்காளர்கள், 971935 பெண் வாக்காளர்கள், 150 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 1892058 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். 22,279 கண்டறிய இயலாதவர்களும், 66842 நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்களும், 109241 இறந்த நபர்களும், 7989 இரட்டைப் பதிவுகளும் இதர இனங்களில் 152 வாக்காளர்கள் என மொத்தம் 206503 நபர்கள் நீக்கப்பட்டனர்.

இறந்த மற்றும் இரட்டை பதிவு என கருதப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து 19.12.2025 முதல் 30.01.2026 தேதி வரை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குரிய வாக்காளர் பதிவு அலுவலரிடம் வாக்காளார்களால் மனு செய்யப்பட்டு அம்மனுக்கள் மீது வாக்காளர் பதிவு அலுவலர்கள் அழைப்பானை அனுப்பி விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் 29329 ஆண் வாக்காளர்கள், 35236 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட 64573 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டும், 5186 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டும் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் படி மாவட்டத்தில் 947278 ஆண் வாக்காளர்கள், 1004012 பெண் வாக்காளர்கள், 155 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1951445 வாக்காளர்கள் உள்ளனர். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.‌ புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டணமின்றி விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பிரியங்காபங்கஜம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள்

திருவிடைமருதூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் -125132, பெண் வாக்காளர்கள் -129313, மூன்றாம் பாலினத்தவர்-8 என மொத்தம் 254453 வாக்காளர்கள் உள்ளனர். கும்பகோணம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 122383 , பெண் வாக்காளர்கள் -129469, மூன்றாம் பாலினத்தவர் -16 என மொத்தம் 251868 வாக்காளர்களும், பாபநாசம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 123838 , பெண் வாக்காளர்கள் 130791, மூன்றாம் பாலினத்தவர் -23 என மொத்தம் 254652 வாக்காளர்களும், திருவையாறு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 125357, பெண் வாக்காளர்கள் -131000, மூன்றாம் பாலினத்தவர் -20 என மொத்தம் 256377 வாக்காளர்களும் உள்ளனர்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள்  118648, பெண் வாக்காளர்கள் -130369, மூன்றாம் பாலினத்தவர் -47 என மொத்தம் 249064 வாக்காளர்களும், ஒரத்தநாடு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் -112298, பெண் வாக்காளர்கள் -118947, மூன்றாம் பாலினத்தவர் -20 என 231251 வாக்காளர்களும், பட்டுக்கோட்டை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் -115354, பெண் வாக்காளர் -125580, மூன்றாம் பாலினத்தவர் -20 என மொத்தம் 240954 வாக்காளர்களும், பேராவூரணி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் -104268, பெண் வாக்காளர்கள் -108543, மூன்றாம் பாலினத்தவர் -15 என மொத்தம் 212826 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 1951445 வாக்காளர்கள் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Embed widget