2வது வாரமாக அரசுப்பேருந்தில் அலுவலகம் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் - கூட்டமாக இருந்ததால் நின்று கொண்டே பயணம் செய்தார்
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்து பயணம்
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள் கிழமை ஒருநாள் அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில், நடந்து அல்லது பொது பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகம் வருதல், சைக்கிளில் அலுவலகம் வருதல் என பல வழிகளில் பயணங்கள் மேற்கொண்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தனது வீட்டில் இருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று அங்கு இருந்து அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வருகை புரிந்தார். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் லலிதா 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். மேலும் அவர் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தார்.
பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர், கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார். மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர். வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அப்போது மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
Nalini Released on Parole : ’30 நாட்கள் பரோலில் வெளியே வந்த நளினி’ கண்ணீருடன் வரவேற்ற தாய் பத்மா..!
ஆனால் கொரோனா, ஒமிக்ரான், என வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்க முக கவசம் சமூக இடைவெளியை கடுமையாக பின் படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், அரசு பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வழியின்றி கூட்டம் வழிந்து நிரம்ப மக்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரசு பேருந்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.