மேலும் அறிய

Pongal 2022: மாட்டுபொங்கல் விழா- நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

’’பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் மாடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது. இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது மூன்றுமாத உழைப்பின் பலனை முழுதாய் பெறமுடியும்'’

தை முதல் தேதி அன்று  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும் அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகள் ஆண்டு தோறும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் உழவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் ஆடு, மாடுகளுக்கு உள்ளிட்ட கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் 2-ஆம் நாள் மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Pongal 2022: மாட்டுபொங்கல் விழா- நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

இந்நாளில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலை, நெற்கதிர் மாலை ஆகியவற்றை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்கள் பண்பாடு. இவ்விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே. அந்த நெட்டி மாலைகள் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த முங்கில்தோட்டம் கிராமத்தில்,  மாட்டுப் பொங்கல் விழாவுக்காக, ஆடு, மாடுகள் அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது.

Pongal 2022: மாட்டுபொங்கல் விழா- நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

மயிலாடுதுறை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டி மாலை செய்யும் தொழிலை சுமார் 200 குடும்பங்கள் மேல் குடிசைத் தொழிலாக செய்து வந்த நிலையில், தற்போது நெட்டி செடிகள் மயிலாடுதுறை பகுதியில் முற்றிலும் அழிந்ததனாலும், பிளாஸ்டிக் மாலைகளின் வரவாலும்  இத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில் இப்பகுதியில் 5 குடும்பத்தினர் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனர்.

Pongal 2022: மாட்டுபொங்கல் விழா- நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

இதுகுறித்து இக்கிராமத்தை சேர்ந்த  சிவானந்தம் என்பவர் கூறுகையில்,  தங்கள் குடும்பத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே நெட்டி மாலை தயாரிப்பு பணியில் கடந்த மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டு வருவதாகவும், குடும்பத்தினர் அண்டை மாநிலமான பாண்டிச்சேரிக்கு சென்று கண்மாய் ஓரங்களில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு விளையக்கூடிய நெட்டி செடிகளை பறித்துவந்து, அதை நன்கு உலர வைத்து பின்பு பலவித வடிவங்களில் வடிவமைத்து அதற்கான வர்ண சாயத்தில் நனைத்து சூரிய ஒளியில் காய வைக்கிறனர். பின்னர் இந்த நெட்டி மாலைகளை கட்டுவதற்காக இயற்கை குணம் கொண்ட தாழம்பூ மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய இழை நார்களை கொண்டு நெட்டி மாலைகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார். 

Pongal 2022: மாட்டுபொங்கல் விழா- நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

மேலும் அவர்கள் கூறுகையில் இதற்கான வர்ண சாயங்கள் கும்பகோணத்திலிருந்து வாங்க படுவதாகவும், இதற்கு ஆகக்கூடிய செலவு முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாகவும், ஒருநாள் விற்பனையை நம்பி குடும்பத்தினரோடு மூன்று மாதம் உழைத்து உருவான நெட்டிமாலைகள் தற்போது உள்ள  சூழ்நிலையில் போதிய விற்பனை நடைபெறுமா? என கவலை  தெரிவிக்கும் இவர்கள்,  இதற்கு முக்கிய காரணம் சந்தைகளில் விற்பனையாகும் நெகிழி மாலைகள்தான் என்கின்றனர்.

Pongal 2022: மாட்டுபொங்கல் விழா- நெகிழி மாலைகளுக்கு தடை விதிக்க நெட்டி மாலை தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

கண்ணைக் கவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் மாலைகள்தான் அதிகம் விற்பனையாவதால் வணிகர்கள் நெட்டி மாலைகளை கொள்முதல் செய்வது குறைந்துள்ளது என்றும், பொதுமக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களையும் வடிவங்களையுமே பார்க்கிறார்களே தவிர, அதில் உள்ள ஆபத்தை உணர்வதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் கால்நடைகள் நெகிழி மாலைகளை தின்று விட்டால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதேவேளை பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் மாடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது. இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது மூன்றுமாத உழைப்பின் பலனை முழுதாய் பெறமுடியும் என்றும் இந்த நெகிழி மாலை விற்பனையை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தனர். உழவனின் தெய்வமான மாடுகளை மாட்டுப்பொங்கள் அன்று  இதுபோன்ற நெட்டி மாலைகள் உருவாக்கி அவைகளை அலங்கரித்து பார்ப்பதே தமிழர் பண்டிகைக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.

Also Read: Gold-Silver Rate, 27 Dec: வாரத்தின் முதல் நாளில் விலை குறைந்த தங்கம், வெள்ளி - இன்றைய முழு விவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget