மேலும் அறிய

’போராட்டம் நடத்தும் சிஐடியு’ ஆதரவாக களமிறங்கிய ஏஐடியுசி – நடந்தது என்ன..?

தமிழ்நாடு அரசு தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளில் சிஐடியு தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் போக்குவரத்து நகர் கிளை முன்பு ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் சிஐடியு தொழிற்சங்கம் திமுகவின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காண வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்நாடு அரசு தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி கும்பகோணம் போக்குவரத்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் போக்குவரத்து நகர் கிளை முன்பு நடைபெற்றது. 

’போராட்டம் நடத்தும் சிஐடியு’ ஆதரவாக களமிறங்கிய ஏஐடியுசி – நடந்தது என்ன..?

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். மத்திய சங்கத் தலைவர் என்.சேகர் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார். சிஐடியு மூத்த தலைவர் ஆர்.மனோகரன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து உரையாற்றினார். போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்களுக்கு திமுகவின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 1/4/2023 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரையும் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், போக்குவரத்து கழகங்களில் அனைத்து பிரிவுகளிலும் தனியார் மயநடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்த முடிவின்படி சம்பள அரியர்ஸ் வழங்கப்பட வேண்டும்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாள் அன்று பணிக்கொடைத் தொகை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும், ஓய்வு பெற்று கடந்த 2024 ஜீன் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 30,0000 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன், மாவட்ட செயலாளர் த.தாமஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், எச்எம்எஸ் நிர்வாகிகள் மோகன்,சேது, ராஜா, சிஐடியு நிர்வாகிகள் எஸ்.ராமசாமி, வி.திருநாவுக்கரசு,    ஏஐடியுசி நிர்வாகிகள் டி.சந்திரன் என்.ஆர்.செல்வராஜ், எம்.பி.இளங்கோவன், என்.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏஐடியுசி மத்திய சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வீடுகளை சென்றடைய வேண்டிய நீர்... வீதியில் வீணாகும் நிலை: தஞ்சை அருகே அவலம்
வீடுகளை சென்றடைய வேண்டிய நீர்... வீதியில் வீணாகும் நிலை: தஞ்சை அருகே அவலம்
மழை சாரலில் மீண்ட பசுமை... மேய்ச்சலில் மூழ்கிய ஆயிரம் ஆடுகள்! கால்நடை வளர்ப்போரின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சி
மழை சாரலில் மீண்ட பசுமை... மேய்ச்சலில் மூழ்கிய ஆயிரம் ஆடுகள்! கால்நடை வளர்ப்போரின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சி
தடுப்பில்லா பாலம்... தினமும் உயிரோடு போராடும் பயணம்! தஞ்சாவூர் அருகே அவலம்
தடுப்பில்லா பாலம்... தினமும் உயிரோடு போராடும் பயணம்! தஞ்சாவூர் அருகே அவலம்
குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி... திட்டையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி... திட்டையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
CPM Slams TVK:
CPM Slams TVK: "ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல.." - தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!
TVK Vijay:
TVK Vijay: "முட்டு கொடுக்க முடியாது முதல்வரே!" பயிர்க்கடன் அறிவிப்பு.. தவெக மீது சொந்தக் கட்சி வேட்பாளரே அதிருப்தி!
CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
கர்நாடகத்தில் ஆட்சி.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் தவெக-விற்கு துணை நிற்குமா?
கர்நாடகத்தில் ஆட்சி.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் தவெக-விற்கு துணை நிற்குமா?
Embed widget