Thanjavur power cut: தஞ்சையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Thanjavur power cut (03-06-2026): தஞ்சை மாவட்டத்தில் நாளை மாரியம்மன்கோவில் பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன்கோவில் பகுதியில் நாளை (ஜூன் 03, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் மாரியம்மன்கோவில் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் அடுத்துள்ள மாரியம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாரியம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் நாளை ஜூன் 3-ம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர உயர் அழுத்த பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்:
புன்னைநல்லூர்
ஞானம் நகர்
புதுப்பட்டினம்
யாகப்பாசாவடி
சூரக்கோட்டை
மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, இப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை (குடிநீர் சேமிப்பு உள்ளிட்டவை) மின் தடை நேரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்டு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















