புதிதாக உருவான மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட முதல்வர் அடிக்கல்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் ரூபாய் 114.48 கோடியில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் போராட்டம் மற்றும் கால்நூற்றாண்டு கனவாக இருந்த தனிமாவட்டம் கோரிக்கையை 2020 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று மார்ச் மாதம் 2020-ஆம் ஆண்டு அரசால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அதே ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2020 டிசம்பர் 28-ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட ஆட்சியராக லலிதா நியமனம் செய்யப்பட்டார்.
Aparna Yadav Joins BJP: பாஜகவில் இணைந்தார், முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ்.
அதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது பின்னர், மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து அங்கு தற்காலிக ஆட்சியர் அலுவலமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம், கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு ரூபாய் 114.48 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று 7 மாடி கொண்ட பிரம்மாண்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா காணொலிகாட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதா.முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ரூ.120 கோடி கடன்..! பிரைம் சரவணா ஸ்டோரை ஜப்தி செய்தது இந்தியன் வங்கி!!
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது. புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.