Black Salt Benefits | செரிமான கோளாறு முதல் மன அழுத்தம் வரை தீர்வு.. கருப்பு உப்பை இப்படி பயன்படுத்துங்க..
இமயமலைப் பகுதிகளில் தோன்றிய கருப்பு உப்பில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. இதிலுள்ள சல்பர் நமக்கு வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவை போன்று மணத்தை கொடுக்கும்.
கருப்பு உப்பு அல்லது ஹிமாலய கருப்பு உப்பு என்பது பிரபலமாக அறியப்படும் இளஞ்சிவப்பு-சாம்பல் எரிமலை கல் உப்பாகும். இது இந்திய துணைக் கண்டத்தில் எளிதில் கிடைக்கிறது. கருப்பு உப்பு பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நமக்கு பிடித்தமான பழங்கள், அல்லது ஒரு கிண்ணம் தயிர் போன்றவற்றில் ஒரு சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடுவோம். உணவின் சுவையை கருப்பு உப்பு மேம்படுத்துகிறது. இது மட்டுமில்லாமல் கருப்பு உப்பு மனித உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.
இந்த நன்மையைத் தவிர இன்னும் ஏராளமான நன்மைகள் கருப்பு உப்பு தண்ணீரில் உள்ளன. அவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். இந்த கருப்பு உப்பை சாலட் மற்றும் பாஸ்தாவை அழகுபடுத்த பயன்படுத்துகின்றனர். பல இந்திய குடும்பங்களில் கருப்பு உப்பு ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இமயமலைப் பகுதிகளில் தோன்றிய கருப்பு உப்பில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. இதிலுள்ள சல்பர் நமக்கு வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவை போன்று மணத்தை கொடுக்கும். வயிறு மற்றும் செரிமான தொடர்பான நோய்களை குணப்படுத்த கருப்பு உப்பானது உதவுகிறது. கருப்பு உப்பில் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. கருப்பு உப்பானது எடை இழப்புக்கு உதவுகிறது. சோடியம் குளோரைடு, சோடியம் பை சல்பைடு, சோடியம் சல்பைடு, இரும்பு சல்பைடு, சோடியம் சல்பேட், மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற சேர்மங்களில் கருப்பு உப்பு உள்ளது.
செரிமான பிரச்சனைக்கு தீர்வு:
ஒரு வேளை உணவு சாப்பிட்ட பிறகு சீராண பிரச்சினை இருந்தால் உணவுக்கு பிறகு 1/2 ஸ்பூன் கருப்பு உப்பை எடுத்து நீரில் கலந்து குடியுங்கள். இது உங்க அஜீரணத்தை போக்க உதவி செய்யும். கருப்பு உப்பு என்பது ஆயுர்வேத மருந்துகளில் காணப்படும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. மேலும் இது பல செரிமான சிக்கல்களை போக்குகிறது.
மலச்சிக்கல்:
கருப்பு உப்பில் காரத் தன்மை பண்புகள் இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. இது வயிற்று தொடர்பான கோளாறுகள், அமிலத்தன்மை ஆகியவற்றை தடுக்கிறது. இதில் சோடியம் குளோரைடு, சல்பேட், இரும்பு, மாங்கனீசு, ஃபெரிக் ஆக்சைடு ஆகியவை உள்ளன. அவை வாய்வுத்தன்மையையும் விலக்கி வைக்கின்றன.
நீரிழிவு நோய்க்கு மருந்து:
நீரிழிவு நோயை உங்க கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தால் சாதாரண உப்பிற்கு பதிலாக அன்றாட உணவில் கருப்பு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது உங்க உடல் சர்க்கரையை பராமரிக்க உதவி செய்கிறது. கருப்பு உப்பு நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவருக்கு உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீரில் கருப்பு உப்பு கலந்து குடியுங்கள். இது உங்க உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி நோய்களையும் விலக்கி வைக்கும்.
ரத்த அழுத்தத்தை குறைக்கும்:
இதில் சோடியம் அளவு குறைவாக இருப்பதால் கருப்பு உப்பு இரத்தத்தை மெலிதாக்க உதவுகிறது. இது சரியான இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இரத்த உறைதலை நீக்கி கொலஸ்ட்ரால் பிரச்சினையை திறம்பட போக்குகிறது.
எடை குறைப்பு:
உடம்பில் தேங்கி இருக்கும் லிப்பிடுகள் மற்றும் என்சைம்களை குறைக்க கருப்பு உப்பு பயன்படுகிறது. இதன் மூலம் உங்க உடல் எடையை குறைக்க முடியும். இது குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. கருப்பு உப்பு எடையை குறைக்க பல வழிகளில் உதவுகிறது.
மன அழுத்தம்:
கருப்பு உப்பு நீரை குடிப்பதால் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனப்படும் மன அழுத்த ஹார்மோன்கள் குறையும். இது பொதுவாக சரியான தூக்கம் இல்லாததால் உடலில் மற்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )