மூலப்பொருட்கள் விலையேற்றம் குறித்து மத்திய அரசுக்கு கவலை இல்லை - MSME நிறுவனங்கள் குற்றச்சாட்டு
மூலப்பொருட்கள் விலை உயர்வால் மூடும் அபாய நிலை உருவாகியுள்ளதாக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் குற்றச்சாட்டு
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன், பொருளாளர் சரவணபெருமாள், தஞ்சை சிட்கோ செயலாளர் கிறிஸ்டோபர், தலைவர் ஆரோக்கியசாமி பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறுதொழில்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், வெல்டிங் அசோசியேசன், கிரில் தயாரிப்பாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்த கொண்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஆகும். ஆனால் இன்று மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தால் சிறு மற்றும் குறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இதனால் சிறு குறு தொழிற்சாலைகள் நடத்த முடியாத சூழல் உருவாகுகின்றது. நடுத்தர மக்கள் செய்யப்படும் தொழில்கள், விலை உயர்வால் மூடும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதுபற்றி மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரிய வில்லை. மூலப்பொருட்களின் விலை உயர்வால், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை முன் கூட்டியே வாங்க முடியாமலும், வாங்கிய பின் விலை உயர்ந்தால், கூடுதலாக கூலி கேட்க முடியாத நிலை உள்ளது. இது போல் ஏராளமான சிறு குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும் 2000 க்கும் மேற்பட்டோர் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற நிலையால், சொந்த தொழிலை விட்டு விட்டு மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும்.
திருவண்ணாமலையில் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு
சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் மாறுபட்ட கருத்து - இருதரப்பு மீனவர்கள் மாறிமாறி ஆட்சியரிடம் மனு
இதை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் மானிய விலையில் மூலப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 1000 த்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.