ஓஎன்ஜிசியில் 2623 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க: தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முதல் B.Tech வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம்.

தஞ்சாவூர்: அடிச்சிடுச்சு லக்கி பிரைஸ் என்று மாணவர்கள் துள்ளி குதிக்கலாம். அதுபோன்ற ஒரு வேலை வாய்ப்பு உங்களை தேடி வந்திருக்கு. ஓஎன்ஜிசியில் 2623 காலியிடங்கள் நிரப்ப இருக்காங்க. தேர்வு கிடையாது, மதிப்பெண் அடிப்படையில் வேலை உறுதி. என்ன தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களே தயாராகிட்டீங்களா.
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முதல் B.Tech வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம். கடைசி தேதி: வரும் 06.11.2025. அதனால இன்னைக்கே உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்க. காலதாமதம் வேண்டாம்.
இந்தியாவின் புகழ்பெற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation)-யில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மத்திய அரசுத் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்தப் பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி வரும் 06.11.2025 ஆகும்.
இந்தப் பதவிக்கான மாதாந்திர ஊதியம் ரூ.8,200 முதல் ரூ.12,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை என்பது ஒரு கூடுதல் சிறப்பாகும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம், B.E/B.Tech எனப் பல்வேறு பிரிவுகளில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எந்தவிதமான எழுத்துத் தேர்வுகளையும் சந்திக்க வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியல் (Merit List) அடிப்படையில் மட்டுமே நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். முதற்கட்டத் தேர்வு முடிந்தவுடன், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே 16.10.2025 அன்று தொடங்கிவிட்டது.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ongcindia.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முன், கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளையும், நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.





















