சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை மைனர் லேங்குவேஜாக அறிவித்தது தேவையற்ற செயல் - அன்பில் கண்டனம்
’’சிபிஎஸ்இ பாடப் பிரிவில் மேஜர் லாங்குவேஜ், மைனர் லாங்குவேஜ் என கொண்டுவந்து தமிழை மைனர் லாங்குவேஜ் ஆக இருக்கிறது; இது போன்ற தேவையில்லாத செயல்களில் ஒன்றிய அரசு செய்து வருகிறது’’
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த கோமல் ஊராட்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கிளை நூலக கட்டிடம் திறப்பு விழா நேற்று மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற கொறடா கோவி.செழியன், சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
நூலக கட்டிடத்தை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்கள் மனரீதியாக மீண்டும் நடைமுறை வாழ்க்கைக்கு வரவேண்டும் என்பதற்காக வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிக்கு வருவதும் வராததும் மாணவ மாணவிகள் விருப்பம் என்று கூறியுள்ளோம். இருந்த போதிலும் பள்ளிக்கு வராத மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். இருப்பினும் பெருமளவு அதாவது 55 சதவிகிதம் அளவு வழக்கமான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. காலாண்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்த முடியாது என்பதால் டிசம்பர் மாதத்தில் இருந்து மாதிரி தேர்வுகள் நடைபெறும். மேலும் பொது தேர்வு முறையில் மாற்றம் இன்றி மார்ச் ஏப்ரல் மாதங்களில் வழக்கமான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ஊர்புற நூலகர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். சிஏ தணிக்கையாளர்கள் அலுவலகத்தில் அலுவலக மொழியாக ஹிந்தியில் நடைமுறைப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அது உயர்கல்வி தொடர்புடையது என்றவர், ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பாடப் பிரிவில் மேஜர் லாங்குவேஜ் மைனர் லாங்குவேஜ் என கொண்டுவந்துள்ளது. இது தவறானது, நமது தாய்மொழியான தமிழ் மைனர் லாங்குவேஜ் ஆக இருக்கிறது. இது போன்ற தேவையில்லாத செயல்களில் ஒன்றிய அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.
Gold-Silver Price, 26 October:ஏறு..ஏறு..ஏறு.. தங்கம் மைண்ட் வாய்ஸ் - இன்றைய விலை நிலவரம்!