ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?
Tomato and Onion price: சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் விலையானது அதிகரித்துள்ளது. அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

காய்கறிகளின் விலை என்ன.?
சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய தேவையாக உள்ளது. எனவே காய்கறி சந்தையில் எப்போதும், மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. அதிலும் பச்சை காய்கறிகளைவிட தக்காளி மற்றும் வெங்காயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாங்கி வருகிறார்கள். ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது என அனைத்திலும் தேவையான காய்கறியாக தக்காளி, வெங்காயம் உள்ளது. எனவே காய்கறி சந்தையில் எந்த காய்கறிகள் வாங்குகிறார்களோ இல்லையோ கட்டாயம் தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய அள்ளிச்செல்வார்கள். அதற்கு ஏற்ப விலையும் குறைவாக இருந்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 10 முதல் 12 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
திடீரென உயர்ந்த வெங்காயம், தக்காளி
ஆனால் தற்போது திடீரென விலையானது உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பை நிறைய வாங்கி செல்லும் மக்கள் குறைவான அளவே வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காய்கறிகள் செடியிலேயே பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
மேலும் வரும் நாட்களில் விலையானது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலைப்பட்டியலை தற்போது பார்க்கலாம், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ முருங்கைக்காய் விலை இவ்வளவா.?
முட்டைக்கோஸ் ஒரு கிலோ ரூ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் 30 முதல் 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





















