![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மயிலாடுதுறையில் கேரளாவுக்கு கடந்த இருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு லாரியில் கடத்தி செல்லப்பட்ட 10 டன் ரேசன் அரிசி நள்ளிரவில் பறிமுதல் செய்து குற்ற புலனாய்வு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
![மயிலாடுதுறையில் கேரளாவுக்கு கடந்த இருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 10 tons of ration rice that was passed to the state of Kerala was confiscated in Mayiladuthurai TNN மயிலாடுதுறையில் கேரளாவுக்கு கடந்த இருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/186811cd97c75e21728eb8edae7d6dc51664439344083186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது முடியாத செயலாக இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மயிலாடுதுறை மாவட்டம் குற்ற புலனாய்வு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பேரில் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சரக்கு ஏற்றும் பகுதி முழுவதும் தார்பாயால் மூடப்பட்ட லாரியை குற்றப்புலனாய்வு காவல்துறையினர் மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் செய்ததில் லாரியில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரனையில் கடலங்குடி பகுதிகளில் ரேசன் அரிசியை வாங்கி, லாரி மூலமாக கேரளா கடத்தி செல்வது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட 10 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றதுடன், 52 வயதான ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ரேசன் அரிசி உரிமையாளர் மற்றும் வாகன உரிமையாளரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். நள்ளிரவில் வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்ட பத்து டன் ரேஷன் அரிசி பிடிபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியை அடுத்த கதிராமங்கலத்தில் தி.மு.க மேற்கு ஒன்றியம் சார்பாக முப்பெரும் விழாவில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலத்தில் சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. மீண்டும் சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளராக பதவி ஏற்கும் ஏஜிஜே பிரபாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மாநில செய்தி தொடர்பு துணை செயலாளர் ராஜீவ் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Digvijay singh: காங்கிரஸ் தலைவர் போட்டியில் நானும் இருக்கேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த திக் விஜய் சிங்..!
இந்நிகழ்வில் சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், பேரூர் கழக செயலாளர் அன்புச் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)