மேலும் அறிய

RSS Rally : ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காஞ்சிபுரம், வேலூர் காவல் சரக மாவட்டங்களிலும் அனுமதி இல்லை.. டிஐஜி சொன்ன தகவல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ,ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ள மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு விதிகளுக்குட்பட்டு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் சார்பில், காவல் ஆணையர் அலுவலகத்தில்,அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். மேலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இந்நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஒருங்கிணைக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும்படி திருமாவளவன் அனைத்து அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று,பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் மனித சங்கிலிப்போராடத்தில் பங்கெடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தன. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை எதிர்தது திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
 
இந்தநிலையில், "பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட சூழலில், இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள், சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அதேபோல், சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் என்ற பெயரில் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் அனுமதி கோரியுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் இரவுபகல் பாராமல், பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக அக்டோபர் 2-ம் தேதியன்று அனுமதி கோரப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிபோராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் ,வேலூர் சரகத்தில் தடை
 
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை டிஐஜி சத்யபிரியா தெரிவித்துள்ளார். வேலூர் சரக (பொறுப்பு) டிஐஜி சத்யபிரியா வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்திற்கும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget