"AstraZeneca தடுப்பூசி மருந்து" - உபயோகத்திற்கு தற்காலிகத்தடை.!
இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
உலக அளவில் கொரோனா பரவ தொடங்கி ஓர் ஆண்டை கடந்துவிட்டது. இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகளின் கடும் முயற்சியால் தற்போது தடுப்பு மருந்து இந்த நோய்க்கு கண்டறியப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது.
அண்டை நாடான மலேசியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதுமான அளவிலான கொரோனா தடுப்பூசி மருந்துகள் தடையின்றி கிடைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் டென்மார்க், நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள AstraZeneca's எனப்படும் கொரோனா தடுப்பு மருந்தினை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இதுவரை இந்த வகை தடுப்பூசி போடப்பட்ட 3 மில்லியன் மக்களில் சுமார் 9000-க்கும் அதிகமான மக்களுக்கு இவ்வகை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்வு குறித்த ஆய்வு முடிவுகள் வரும்வரை இந்த தடுப்பூசி இருப்பில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.