வேலை...வேலை..! ரேஷன் கடைகளில் 4000 காலிப் பணியிடங்கள்.. விண்ணப்பிக்கத் தயாரா?
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது. 4000 விற்பனையாளர் மற்றும் எடையாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை கடைசி தேதிக்கு முன்னதாக இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில் 25,000 பேர் பணியாற்றிவருகின்றனர். ஊழியர் பற்றாக்குறை காரணமாக ஒரே நபர் இரண்டு, மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்கிறார். அதிக பணிச்சுமையால் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால், மாவட்ட ரீதியாக ரேஷன்கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் நோக்கில், 100 முதல் 200 பேரை ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேர்காணல் நடத்தி பணியாட்களை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி சில அரசியல்வாதிகள் பலரிடம் 5 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த திட்டம் நேர்காணல் முடிந்தும் தேர்வானர்கள் பட்டியல் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, இதற்கு முன்பு ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும், புதிதாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
In the last 10 months, the Tamilnadu Govt has signed 130 MoUs attracting investment of Rs.68,375 cr, creating employment opportunities for nearly two lakh people.
— TN Updates (@updates_tn) April 3, 2022
(Credits: The Hindu) pic.twitter.com/6LboWUosxr
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்