மேலும் அறிய

TN Corona LIVE Updates: கர்நாடகாவில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Key Events
tamilnadu india world corona live updates 21 may 2021 TN Corona LIVE Updates: கர்நாடகாவில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்

Background

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று மாநிலத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தமிழகத்தில் நேற்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 நபர்கள் ஆவர். சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 667 ஆகும். மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 741 ஆகும், பெண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 25 நபர்கள் ஆவார்கள், மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 919 நபர்கள் ஆவார். பெண்கள் 15 ஆயிரத்து 660 நபர்கள் ஆவார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 368 நபர்கள் ஆவர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்களாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 397 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 105 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

21:04 PM (IST)  •  21 May 2021

கர்நாடகாவில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை எட்டு மாநிலங்களில் மட்டுமே அதிகளவில் உள்ளதாக மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த எட்டு மாநிலங்களில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவும் இடம்பெற்றுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, கடந்த 10-ந் தேதி முதல் வரும் 24-ந் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் அந்த மாநிலத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்த மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

20:17 PM (IST)  •  21 May 2021

முதன்முறையாக 467 நபர்கள் கொரோனா வைரசால் தமிழகத்தில் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதியதாக பதவியேற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்தே வருகிறது.

தமிழகத்தில இன்று ஒரே நாள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 36 ஆயிரத்து 184 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியிருப்பது  மக்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளளது.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரத்து 262 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 30 ஆயிரத்து 271 நபர்கள் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 நபர்கள் ஆகும். இன்று தொற்று உறுதியானவர்களில் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 913 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிககப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவோர் உள்பட சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 782 ஆகும்.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 166 ஆகும். பெண்கள் 7 லட்சத்து 16 ஆயிரத்து 784 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 20 ஆயிரத்து 425 நபர்கள் ஆவார்கள். பெண்கள் 15 ஆயிரத்து 759 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 25 ஆயிரத்து 368 ஆகும். இதனால், மாநிலம் முழுவதும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்கள் ஆவார்கள்.

தமிழகத்தில் நேற்று 397 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 168 பேர் தனியார் மருத்துவமனையிலும், 299 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.  தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 214 நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் மட்டும் 128 நபர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.

 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Baba Vanga Predictions 2026: “ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
“ஏஐ, இயந்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும்“; 2026-ல் ஆபத்து; பாபா வங்கா கணித்தது என்ன.?
Tamilan : ‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
‘அடக்குனா அடங்குற ஆளா நீ’ யாரு டா அடிமை? – லண்டனில் போராடி வென்ற தமிழர்..!
Old pension scheme : மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? புத்தாண்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமா குஷியான அறிவிப்பு
Embed widget