![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PSBB Issue : ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒய்.ஜி.மகேந்திரன் கடிதம்
ஆசிரியர் உண்மையில் குற்றவாளி என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கு எழுதிய கடிதத்தில் நடிகரும் அந்த பள்ளியின் டிரஸ்டியுமான ஒய். ஜி. மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
![PSBB Issue : ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒய்.ஜி.மகேந்திரன் கடிதம் Y. G. Mahendran said Strict action should be taken against the teacher for PSBB Issue PSBB Issue : ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஒய்.ஜி.மகேந்திரன் கடிதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/24/5b61727c94cd94175660e1705b97c7bb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆசிரியர் உண்மையில் குற்றவாளி என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கு எழுதிய கடிதத்தில் நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் கே.கே.நகர் கிளையில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ராஜகோபாலன் என்பவர் மீதுதான் இந்தப் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸராக இருக்கும் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி க்ருபாளி என்பவர், தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தொடர்புடைய அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக டிரஸ்டியும் பிரபல நடிகருமான ஒய். ஜி. மகேந்திரன் அந்த பள்ளிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘சென்னை கேகேநகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் ஒரு ஆசிரியர் தனது வகுப்பின் பெண் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்திகளை சமூகவலைதளங்களில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். புகழ்பெற்ற மீடியா ஒன்று இந்த சம்பவம் தொடர்பாக என்னிடம் விளக்கங்களைக் கேட்கிறது. டீன் மற்றும் நிர்வாகத்திடம் முறையிட்டதாகவும், எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர்கள் கூறுவதாக செய்திகள் வருகின்றன.
பள்ளியின் அன்றாட நிகழ்வுகள் குறிப்பிட்ட பள்ளி கிளையின் டீன் மற்றும் இயக்குநரின் கீழ் வருகின்றன. எனவே இந்த விஷயத்தில் விசாரணை நடத்தி, புகாரின் உண்மையை ஆராய வேண்டியது உங்கள் கடமை. ஆசிரியர் உண்மையில் குற்றவாளி என்றால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, “பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை நானோ எனது மகள் மதுவந்தியோ நடத்தவில்லை என்றும் நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டிதான் எனவும் விளக்கமளித்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன். இந்த புகார் பார்த்ததுமே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பள்ளிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், முழுக்க முழுக்க இந்த பள்ளியின் நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்வது எனது தம்பி மனைவியும் ( Dean & Director) தம்பியும்தான் (Financial Director) ” என்று Abp நாடு செய்தி நிறுவனத்திற்கு தெளிவுப்படுத்தியிருந்தார்.
மேலும், “இப்படி குற்றச்சாட்டு வருகிறது. உடனடியாக இது என்னவென்று விசாரிக்க வேண்டும் என கடிதம் எழுதியிருகிறேன். இந்த புகார்களால் எனது தாயின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தெரிவித்தார்.
இந்த பள்ளியில் நான் ஒரு டிரஸ்டிதானே தவிர பள்ளியை நான் நடத்தவில்லை. எனது தாய்க்கு பிறகு எனது தம்பி மனைவியும், தம்பியும் மட்டுமே இந்த பள்ளி நிர்வாகத்தை கவனிக்கிறார்கள். ஆனால், பள்ளிக்கு நான் கடிதம் எழுதிய பின்னர் எனக்கு அங்கிருந்து கிடைத்த தகவல் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இதற்கு முன் வந்ததே இல்லை என்கிறார்கள். இந்த பள்ளியை நடத்துவதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. அதனை முழுக்க முழுக்க அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்” என்றும் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)