MK Stalin | நான் மிசாவையே பார்த்தவன்.. பழனிசாமி யாரை மிரட்டுகிறார்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.
![MK Stalin | நான் மிசாவையே பார்த்தவன்.. பழனிசாமி யாரை மிரட்டுகிறார்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் Whom Edappadi Palanisamy is Intimidating says Tamilnadu CM MK Stalin Madurai Urban Local Body Election campaign MK Stalin | நான் மிசாவையே பார்த்தவன்.. பழனிசாமி யாரை மிரட்டுகிறார்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/6db85bba80bc0658c0b8ee7b293c0b98_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு காணொளி மூலம் பிரச்சாரம் செய்துள்ளார். அதில், “திமுக ஆட்சி இன்னும் 27 அமாவாசைகள் தான் இருக்கும் என அதிமுகவினர் புது ஜோசியம் சொல்கிறார்கள்.ஆனால், அரசியல் அமாவாசைகள் யாரென்று தெரிந்துதான், அமைதிபடையாய் மாறி மக்கள் வாக்களித்து அதிமுகவினரை இப்போது புலம்பவிட்டிருக்கிறார்கள். அதிமுக அஸ்தனமனத்தில் உள்ளது. ஒபிஎஸ் தர்மயுத்தம் செய்ததுதான் மிகப்பெரிய காமெடி.
#JUSTIN | பழனிசாமி யாரை மிரட்டுகிறார்; நான் மிசாவையே பார்த்தவன் என்னை அவரால் மிரட்டமுடியுமா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்https://t.co/wupaoCQKa2 | #MKStalin #EdappadiPalanisamy #DMK @EPSTamilNadu @mkstalin pic.twitter.com/ygW786fMUi
— ABP Nadu (@abpnadu) February 14, 2022
ஜல்லிக்கட்டு போராட்டத்தை தீவிரவாத போராட்டம், தேச விரோத போராட்டம், சமூக விரோத போரட்டம் என சொன்னவர் ஒபிஎஸ். இதனை இல்லையென்று அவரால் மறுக்க முடியுமா ? இதனை சட்டமன்றத்திலேயே அவர் கூறியுள்ளார். பழனிசாமி யாரை மிரட்டுகிறார். நான் மிசாவையே பார்த்தவன் என்னை அவரால் மிரட்டமுடியுமா? என்னை மிரட்டிவிடமுடியும் என கற்பனையில் கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார் அப்போது அவர் " அதிமுக ஆட்சியை விட்டு செல்லும் போது தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து கஜானாவை காலியாகிசென்றனர். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதிமுக ஆட்சியின்போது ஒரு கோடி பேருக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாத ஆட்சி காலத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 10,12ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் லீக் - CSR பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)