மேலும் அறிய

TN Rain Alert: இன்று மாலை 7 மணிவரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் மாலை 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

திருவள்ளூர். கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 15 மாவட்டங்களில் மாலை  மாலை 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்: 

04.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு  வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

05.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள்,  மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

06.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள்,  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

07.07.2023 மற்றும் 08.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

அரபிக்கடல் பகுதிகள்:

04.07.2023 முதல் 06.07.2023 வரை: இலட்சத்தீவு- மாலத்தீவு  பகுதிகள், கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள்,  மத்திய அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு   அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45  முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07.07.2023 மற்றும் 08.07.2023 வரை: மத்திய அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு   அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45  முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலட்சத்தீவு- மாலத்தீவு  பகுதிகள், கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump and Musk to Speak?: அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
அப்பாடா!! முடிவுக்கு வரும் மோதல்.? - மஸ்க் கிட்ட பேசுறத பற்றி ட்ரம்ப் என்ன சொன்னார் தெரியுமா.?
Starlink Internet Price: மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் - வெளியான விலை விவரங்கள்
Watch Video: தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
தொடர்ந்து தாக்கும் ரஷ்யா; அசராமல் எதிர்க்கும் உக்ரைன் - வீடியோ வெளியிட்ட பதுகாப்புப் படை
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
Seeman: ”இல்லை, இல்லை” அப்ப எதுக்கு ரூ.45 கோடி? திறந்தா மட்டும் போதுமா? CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
iOS 26 Launched: ஐஒஎஸ் 26-ஐ வெளியிட்ட ஆப்பிள் - இனி உங்க ஐபோன் இப்படி தான் வேலை செய்யும் - புதுசா என்ன இருக்கு?
Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்
Citroen Discount: வாங்குன அடி அப்படி..! ரூ.2.8 லட்சம் வரை ஆஃபரை அள்ளி வீசிய சிட்ரோயன் - எல்லா கார் மாடல்களுக்கும்
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
MS Dhoni: தல போல வருமா? தோனியின் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் - லிஸ்டில் லேட்டு தான் ஆனாலும் மாஸ் தான்..
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Hyundai Hybrid SUVs: இனி எங்கும் ஹைப்ரிட் தான் - ஒதுங்காட்டி, தூக்கி சாப்பிட தயாரான ஹுண்டாய் - 3 மாடல்கள்
Embed widget