மேலும் அறிய

TN New Dam Issue: கர்நாடக புதிய அணைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு -துரை முருகன்

கர்நாடக அணை கட்டும் பிரச்னைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நடுவர் மன்றத்தின் மூலம் கர்நாடகத்தின் புதிய அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்டியது பற்றி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நடுவர் மன்றத்தின் மூலம் கர்நாடகத்தின் புதிய அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும். கர்நாடகாவின் அணையால் கிருஷ்ணகிரியில் 870 ஹெக்டேர் பாசனம் பாதிக்கப்படும். கர்நாடக அணை கட்டும் பிரச்னைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்க்க உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள், மக்களின் நலனை பாதுகாக்க தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மாநில அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விரிவான அறிக்கை

02-07-2021 அன்று சில நாளோடுகளில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும்.

MK Stalin Health Updates: ராமச்சந்திராவில் முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை!

2017இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு அந்தப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலநீரை செரிவூட்டுவதற்காகவும் சுமார் 0.5 டிஎம்சி கொள்ளளவுள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019-இல் இந்த அணை அநேகமாக கட்டிமுடிந்துவிட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இந்த செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 18-5-2018 இல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14-11-2019 அன்று அளித்த தீர்ப்பில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது.

TN New Dam Issue: கர்நாடக புதிய அணைக்கு நடுவர் மன்றம் மூலம் தீர்வு -துரை முருகன்

29-06-2021 அன்று தமிழ்நாடு அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மார்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Curfew Extension: எல்லாம் ‛ரிலீஸ்...’ ஒரே தளர்வு... ஒரே கட்டுப்பாடு; தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு நீட்டிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
Embed widget