TN Curfew Extension: எல்லாம் ‛ரிலீஸ்...’ ஒரே தளர்வு... ஒரே கட்டுப்பாடு; தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
![TN Curfew Extension: எல்லாம் ‛ரிலீஸ்...’ ஒரே தளர்வு... ஒரே கட்டுப்பாடு; தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு நீட்டிப்பு! Further extension of curfew in Tamil Nadu creates uniform relaxation notice for all districts TN Curfew Extension: எல்லாம் ‛ரிலீஸ்...’ ஒரே தளர்வு... ஒரே கட்டுப்பாடு; தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு நீட்டிப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/02/039924e34b91aaae60e623595d5ee5de_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பெருந்தொற்று மத்திய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 31-7- 2021 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 296.2021 அன்று அறிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 5-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 6-7-2021 முதல் 12-7-2021 காலை விதிக்கப்படுகிறது. 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது
* மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்து
* திரையரங்குகள்
* அனைத்து மதுக்கூடங்கள்
* நீச்சல் குளங்கள்
* பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்
* பொழுதுபோக்கு விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
* உயிரியல் பூங்காக்கள்
* நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
* இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும்; மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும். தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் சுட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அளைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8.00. மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர அனைத்து செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.
மேலும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.
* அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் (Business to Business Exhibitions) நடத்த அனுமதிக்கப்படும். உரிய அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் இதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த அரங்குகளில் பொருட்காட்சி அமைப்பாளர் மற்றும் விற்பனைக் கூடங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள், கட்டாயம் RTPCR பரிசோதணை அல்லது இரண்டு தவணைகளில் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
* டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* உணவகங்கள் விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
* தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.
* கேளிக்கை விடுதிகளில் (Clubs) உடற்பயிற்சி கூடங்கள். விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
* தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.
• தங்கும் விடுதிகள், உறைவிடங்கள் (Hotels and Lodges). விருந்தினர் இல்லங்கள் (Guest Houses) செயல்பட அனுமதிக்கப்படும். அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் (dormitory) 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பவர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)