மேலும் அறிய

Vairamuthu Protest : இந்தி திணிப்புக்கு எதிராக வைரமுத்து தலைமையில் நாளை தமிழ் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்..!

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வைரமுத்து தலைமையில் நாளை தமிழ் சங்கங்கள் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளன.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்திமொழி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

தமிழ்நாடு அரசு இந்தித் திணிப்புக்கு எதிராகத் தனித் தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. உள் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழி குழு சமீபத்தில் பரிந்துரை ஒன்றை அளித்து இருந்தது. அதில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி பயிற்று மொழியாகக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தை விருப்ப மொழியாக மட்டுமே வைத்து இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் பேசும் மக்களின் நலனுக்கு எதிராக அமித்ஷா குழு பரிந்துரைத்ததை எதிர்த்து இந்த தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதல்வர் மு. க .ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்நிலையில், கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில், தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ்க் கூட்டமைப்பு இந்தித் திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அக்டோபர் 26-ந் தேதி (நாளை) புதன்கிழமை காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழும் இந்தப் போராட்டத்தில் தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும்திரளாகக் கலந்துகொள்கிறார்கள்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெற்றித் தமிழர் பேரவை, வடசென்னைத் தமிழ்ச் சங்கம், தலைநகர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், உலகத் தமிழர் பேரவை, சென்னை முத்தமிழ்ச் சங்கம், உறவுச் சுரங்கம், உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம், வள்ளுவட் மேடை, தொன்மைத் தமிழ்ச் சங்கம், கொளத்தூர் கலை இலக்கிய மன்றம், திருவள்ளூர் பாவேந்தர் இலக்கியப் பேரவை, மாதவரம் திருக்குறள் கழகம், கலந்துரையாடுவோம் குழு, நாளந்தா இலக்கிய நலச் சங்கம், தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை, கவிஓவியா கலை இலக்கிய மன்றம், சமத்துவ இலக்கியக் கழகம், தமிழ்நாடு மாணவர் - இளையோர் கூட்டமைப்பு, இலக்கியச் சோலை, தமிழ்ப்பணி, கவிதை உறவு, தஞ்சைத் தமிழ்த்தாய் அறக்கட்டளை, நிலா வட்டம், பாரதி தமிழ்ச் சங்கம், இலக்கிய வானம், திசைகள் கலை இலக்கிய மன்றம், பொதிகை மின்னல் இலக்கியக் கூடல், சமூக – சட்ட அரசியல் விழிப்புணர்வு அமைப்பு, கவிச்செல்வர் படைப்பகம், திண்டிவனம் தமிழ்ச் சங்கம்  உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் கலந்துகொள்கின்றன. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையென்று கருதித் தமிழர் பெருங்கூட்டம் திரளும் என்று தமிழ்க்கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

Rishi Sunak : இந்திய வம்சாவளி பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் முதல் உரை...அவர் அளித்த உறுதிமொழி என்ன தெரியுமா?

Diwali in white house: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்; லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Chennai Drainage: மழைநீர் வடிகால் பணிகளின் நிலை என்ன? எப்போது முடியும்? சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget