மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Vaigai Train: வந்தே பாரத் ரயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்.. பயணிகள் அதிருப்தி!

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலுக்காக வைகை ரயிலின் பயண நேர நாளை முதல் மாற்றப்படுகிறது. மாற்றப்பட்டுள்ள புதிய நேரம் கீழே விளக்கமாக உள்ளது.

வந்தே பாரத் ரயிலால் சிக்கல்:

46 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையும் சென்னையும் இணைக்கும் ரயிலாக  வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலில் தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு பயணித்து வருகின்றனர். வரலாற்று சிறப்பு  மிக்க இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி உயர் வகுப்பு தொடங்கி, முன்பதிவற்ற பெட்டிகள் வரை ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் மதுரை டூ சென்னை இடையே பயணித்து வந்த நிலையில், தற்போது புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

வைகை ரயில் தாமதம்:

அண்மையில், கடந்த 24ஆம் தேதி நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர்  மோடி தொடங்கி வைத்தார். அதில், நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையும் அடங்கும். இந்த சென்னை - மதுரை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலால் தற்போது வைகை, பொதிகை உள்ளிட்ட ரயிலுக்கு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக வைகை எக்ஸ்பிரஸ் காலை 7.10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 7:15 மணி நேரம் பயணித்து பிற்பகல் 2.25 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல, பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வைகை, 7.25 மணி நேரம் பயணித்து மதுரைக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடைகிறது. இந்நிலையில்தான், வந்தே பாரத் ரயில் காரணமாக வைகை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றி பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரித்துள்ளது தெற்கு ரயில்வே. இந்த நேர மாற்றம் நாளை (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் நேரம் மாற்றம்:

  • மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ்(12636) மதுரையில் இருந்து காலை 7.19 மணிக்கு பதிலாக காலை 6.40 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். 
  • மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ்(12635) மதுரைக்கு இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு வந்தடைகிறது.
  • செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்(12662) மதுரையில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.45 மணிக்கு 10 நிமிடம்  முன்னதாக புறப்படுகிறது.
  • மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்(12661) மதுரையில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படுகிறது.
  • மதுரை-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்(16722) மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.00 மணிக்கு 25 நிமிடங்கள் முன்னதாக புறப்படுகிறது. 
  • மதுரை-சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்(12638) மதுரையில் இருந்து 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படுகிறது.
  • மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16868) மதுரையில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு பதிலாக அதிகாலை 3.35 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படுகிறது.  

இந்த புதிய நேர அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருவதாக ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 வருடம் பாரம்பரியமிக்க வைகை ரயிலின் பயண நேரத்தை 7 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 7.30 மணி நேரமாக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது. இந்த நேரம் மாற்றம் பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget