மேலும் அறிய

Pen Monument: மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படுமா? மத்திய நிபுணர் மதிப்பீடு குழு இன்று முடிவு..!

மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக இன்று மத்திய நிபுணர் மதிப்பீடு குழு ஆலோசனை செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அவருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரை பகுதியில் கடலின் நடுவே அமைக்க முடிவு செய்துள்ளது.

பேனா நினைவுச்சின்னம்:

ரூபாய் 81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா சிலைக்காக கடலில் நடுவே 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்பட உள்ளது. கடலின் நடுவே அமைக்கப்பட உள்ள இந்த பேனா சின்னத்திற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவைப்படும் திட்டங்களை பற்றி விவாதிக்க 14 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் மதிப்பீடு குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

நிபுணர் மதிப்பீடு குழு:

இந்த ஆலோசனையின்போது, நடுக்கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாகவும் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குழு பரிசீலனை மேற்கொள்கிறது. இந்த நிபுணர் மதிப்பீடு குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலே நடுக்கடலில் பேனா சின்னம் அமைப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவை அறிவிக்க உள்ளது.

நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கடந்த 5-ந் தேதி ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாலும், I(A) என்று திட்ட அறிக்கையில் குறிப்பிட்ட பகுதியில் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் எளிதாக சென்று வருவதற்கு இடையூறாக எந்த தூண்களும் அமைக்கப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் கட்டுமான பணிகள் ஆமை இனப்பெருக்கும் காலத்தில் நடைபெறக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விதிகளில் திருத்தம்:

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. இந்த பகுதி என்பது வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு புதியதாக எந்த கட்டுமானத்தையும் கட்ட முடியாது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு இந்த விதியில் ஒரு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

மேலே குறிப்பிட்ட IV(A) வரையறுக்கப்பட்ட பகுதிகளில் நினைவிடங்கள்/ நினைவுச்சின்னங்கள் அமைப்பதற்கு விதிவிலக்கு அளித்து திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தத்தின்படியே, மகாராஷ்ட்ராவில் மும்பை கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்பட்டது.

இன்று மத்திய சுற்றுச்சூழல் நிபுணர்கள் மதிப்பீடு குழு அறிக்கையின் பரிசீலனை அடிப்படையிலே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதால், அவர்களின் முடிவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த பேனா நினைவுச்சின்னத்திற்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Appavu: “பெண் கல்வியை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு” - பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு பெருமிதம்

மேலும் படிக்க: Crime: கார் பேனட்டில் தொங்கிய போக்குவரத்து காவலர்..! 19 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்சென்ற இளைஞர்..! நடந்தது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget