தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட 11 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி காத்திருப்பு பட்டியலில் இருந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பகேர்லா செபாஸ் கல்யாண், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாகவும், சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையர் சக்திவேல் CID பதுகாப்பு பிரிவு எஸ்.பியாகவும், சென்னையில் மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பியாக இருந்த பாண்டியராஜன் கொளத்தூர் காவல் துணை ஆணையராகவும், சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இருந்த ஷியாமலா தேவி, சென்னை மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பியாகவும், சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இருந்த சரவணகுமார், சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாவும், திருப்பூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் மாவட்ட எஸ்.பியாகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையர் ரோஹித் நாதன் ராஜகோபால், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராகவும், கோயம்புத்தூர் டிராபிக் பிரிவு துணை ஆணையர் ராஜராஜன் திருப்பூர் மாவட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராவும், மதுரை நகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் அனிதா, திருநெல்வேலி நகர துணை காவல் ஆணையராகவும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இரு தினங்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நேசப் பிரபு பணி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்தனர். அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. அவர் முன்கூட்டியே மர்ம நபர்கள் பின் தொடர்வது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் மெத்தனமாக செயல்பட்டதாக நேசபிரபு குற்றம்சாட்டி இருந்தார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவம் தொடர்பாக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் - தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக, பொறுப்பாளர்கள் நியமனம்