மேலும் அறிய

Gali Madhavi Latha : 1178 அடி.. காஷ்மீரின் அதிசயம்.. உலகை அலறவிடும் இந்திய பெண்! யார் இந்த மாதவி ?

உலகின் உயரமான EIFFEL TOWER-ஐ விட உயரமாக காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் இந்தியாவின் கட்டிடக்கலையை உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பறைசாற்றியுள்ளது. இந்த செனாப் ரயில் பாலத்தின் முக்கிய தூணாக 
இருந்து வேர்வை கண்ணீர் சிந்தி தனது வாழ்வின் 17 வருடங்களை இதற்காகவே அர்ப்பணித்துள்ளார் தென்னிந்தியாவின் சிங்கப்பெண் கலி மாதவி லதா…

ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தின் முதல் இஞ்சினியராக உருவெடுத்து இந்தியாவின் சிகரத்தை எட்டியுள்ளார் பேராசிரியை மாதவி லதா. ஆந்திர மாநிலம் ஏடுகுண்டலபாடு என்ற குக்கிராமத்தில் வசித்த விவசாய குடும்பத்தில் பிறந்தார் லதா.. வீட்டின் நான்கு பிள்ளைகளில் இவர்தான் கடைக்குட்டி.. தனது பள்ளிப்படிப்பு முழுக்க அரசு பள்ளியில் பயின்றார். இளம்வயதில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற இவரது கனவு
ஏழ்மை காரணமாக கனவாகவே போனது. அதனால் உயர்கல்விக்காக அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். 

1992ல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்(JNTU) distinction-ல் பிடெக் சிவில் இஞ்சினியரிங் முடித்தார் மாதவி.பிறகு NIT வாரங்கலில் M Tech geotechnical engineering முடித்து கோல்டு மெடல் பெற்றார். பின்னர் 2000-ல் ஐஐடி மெட்ராஸில் சிவில் இஞ்சினியரிங்கில் பி ஹெச்டி முடித்தார். அதன் பின்னர் 2002-2003 ல் இந்திய அறிவியல் நிறுவனமான IISc-யில் ராக் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போது அவர் ஐஐடி குவாஹாதியில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தார். பின்னர் IISC-ல் சிவில் இஞ்சினியரிங் துறை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். 

பின்னர் அங்கு பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் பேராசிரியையானார். பல நூறு பொறியியல் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழந்த அவர் ஜியோடெக்னிகல் இஞ்சினியரிங் ஆராய்ச்சிகளுக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். மேலும் அங்குள்ள Sustainable Technologies மையத்திற்கு தலைமை தாங்குகிறார். IISC geotechnical துறையில் பெண்களுக்கு என தனி கழிப்பறை இவர் காலகட்டத்தில் இல்லை. ஆண்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துறையை பெண் தேர்ந்தெடுத்தால் இப்படி ஒரு சவால் வரும் என கூட பலரும் அப்போது அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு கழிப்பறைக்காக அன்று போராடியாவர் பின்னர் அந்த துறை பாதிக்கு பாதி பெண்கள் பயிலவும் வழிவகுத்தார்.

இந்நிலையில் காஷ்மீரில்  பிரதமர் மோடி கடந்த ஜூன் 6 ஆம்  தேதி செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். 
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில், செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்துக்கு மேலே இந்த ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் உயரமான கோபுரம் என கருதப்படும் ஈபிள் டவரே 330 மீட்டர் தான். இந்த செனாப் பாலம் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 1,486 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. உதம்பூர்- - ஸ்ரீநகர்- - பாரமுல்லா ரயில் இணைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் உள்ளது.2004 ஆம் ஆண்டு துவங்கியது இந்த ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள். இதில் 2005 ஆம் ஆண்டு புவி தொழில்நுட்ப ஆலோசகராக இணைந்தார் மாதவி லதா.. சுமார் 17 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு, சவால்கள் நிறைந்த இந்த செனாப் ரயில் பாலத்தை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளார் மாதவி. 

நில அதிர்வு, அதீத காற்று, குண்டு வெடிப்பு போன்ற சவால்கள் நிறைந்த இமாலய மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால் இதன் கட்டுமான பணிகளிலும் பல சவால்கள் வந்துள்ளது. மேலும் செனாப் நதியும் அமைந்துள்ளதால் நில சரிவுக்கான அபாயமும் அங்கு இருந்துள்ளது..குறிப்பாக தீவிர புவியியல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு இடையே இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர் நமது இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள்.. 

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் STEAM துறையில் 75 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். அதில் மாதவி லதாவும் ஒருவர். 

சவால்கள் நிறைந்த பெண்கள் அதிகம் சாதிக்காத ஒரு துறையில் பல போராட்டங்களை கடந்து சாதித்து காட்டி இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் தென்னிந்திய பேராசிரியை கலி மாதவி லதா..

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
ABP Premium

வீடியோ

GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Trump Nigeria ISIS: நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
நைஜீரியாவில் ISIS மீது தாக்குதல்; தனது பாணியில் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் வாழ்த்து; கடும் எச்சரிக்கை
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
Jananayagan Audio Launch: அட்லீ முதல் அனுராதா வரை.. விஜய்க்காக மலேசியாவிற்கு பறந்த பிரபலங்கள்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
’’முதல்வருக்கு கூச்சமில்லையா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு’’- ஆசிரியர்கள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Ukraine Zelensky: விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
விரைவில் அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி; அமெரிக்க தூதர்களுடன் பேச்சு; முடியும் போர்..
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB Recruitment 2025: டிப்ளமோ போதும்; மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தில் பணி- ரூ.1.3 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget