TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம், 2030 காலிப்பணியிடங்கள்..!
TNPSC Group 2 Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 Exam: குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வாளர்கள் இன்று தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் 14ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
2030 காலிப்பணியிடங்கள்:
குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன. தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளெர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனை தொடர்ந்து பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுகளுக்கு முறையே ரூ.150, ரூ.100 மற்றும் ரூ.150 செலுத்த வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் கட்டண தொகையை காலக்கெடுவிற்குள் செலுத்த வேண்டும்.
தேர்வுக்கான தகுதி:
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு 2024க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, தேர்வாளர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவரது வயது 18, 20, 22 அல்லது 26 வயதுக்குக் குறைவாகவோ அல்லது 30 அல்லது 40 வயதுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.
Combined Civil Services Examination - II (Group II and IIA Services) - Notification No.08/2024 - Issued. For details, click:- https://t.co/7sxBOS0iu4 pic.twitter.com/Y3hgyv0BF5
— TNPSC (@TNPSC_Office) June 20, 2024
தேர்வு விவரங்கள்:
TNPSC குரூப் 2 மற்றும் 2A 2024க்கான முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வு முறைகள் தொடர்பான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
ப்ரிலிம்ஸ்
தேர்வு முறை: ஆஃப்லைன்
நேரம்: 3 மணி நேரம்
பிரிவுகள்:
- பொது தமிழ்/பொது ஆங்கிலம்
- பொது ஆய்வுகள்
- திறன் மற்றும் மன திறன் சோதனை
மொத்த கேள்விகள்: 200
மதிப்பெண் : ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்கள் இருக்கும், மேலும் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது.
மதிப்பெண்கள்: 300
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ்)
மெயின்ஸ்:
தேர்வு முறை: ஆஃப்லைன்
- நேரம்:
தாள்-I: 1 மணி 30 நிமிடங்கள்
தாள்-II: 3 மணி நேரம்
பிரிவுகள்:
தாள்-I (கட்டாய தமிழ் தகுதி தாள் )
தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு - ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு
- துல்லியமான எழுத்து
- புரிதல்
- ஹிண்ட்ஸ் டெவலப்மெண்ட்
- கட்டுரை எழுதுதல் (பொது)
- கடிதம் எழுதுதல் (அதிகாரப்பூர்வ)
- தமிழ் மொழி அறிவு
தாள்-II (பட்டம் தரநிலை) - பொது ஆய்வுகள் (விளக்க வகை)
மொத்த மதிப்பெண்கள்:
தாள்-I: 100 (தகுதி)
தாள்-II: 300
மொழி: இருமொழி (ஆங்கிலம் மற்றும் தமிழ் தாள்-II