TN Special Buses: வீக் எண்ட்: சென்னையில் இருந்து நாளை கிளம்பும் சிறப்பு பேருந்துகள்...ரெடி ஜூட் மக்களே!
வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
TN Special Buses: வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் நாளை முதல் இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
600 சிறப்பு பேருந்துகள்:
இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "07/10/2023 (சனிக்கிழமை) மற்றும் 08/10/2023 (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு 06/10/2023 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 06/10/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி , சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . இந்நிலையில் , இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 5,896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவையினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
AAP MP Custody: ஆம் ஆத்மிக்கு நெருக்கடி.. சிசோடியாவை தொடர்ந்து எம்பி சஞ்சய் சிங்குக்கு ED காவல்
"அறிவியலுக்கு முக்கியத்துவம் தந்த திரைப்படம்" The Vaccine War-ஐ புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி