மேலும் அறிய

"அறிவியலுக்கு முக்கியத்துவம் தந்த திரைப்படம்" The Vaccine War-ஐ புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

விஞ்ஞானிகளுக்கும் அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தைத் தயாரித்தவர்களை வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

ராஜஸ்தானில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில அரசியலை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது.

ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தானில் 100 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த முறை, பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பல்வேறு சமூக நல திட்டங்களை அறிவித்துள்ள அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக களச்சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற பாஜக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், பாஜக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜோத்பூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

"மக்கள் நலனை விட தனது வாக்கு வங்கியை நேசிக்கும் காங்கிரஸ்"

"காங்கிரசுக்கு விவசாயிகள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் அக்கறை இல்லை. முதலமைச்சர் நாற்காலியைத் தவிர வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியாது. மக்கள் நலனை விட காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை நேசிக்கிறது. சுற்றுலாவில் ராஜஸ்தானை முதலிடத்திற்கு கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம். அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மாநிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் வளர்ச்சியை எடுத்துச் செல்லும்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்தில், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குட்டா, ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு ரேட் டைரி ஒன்றை கொண்டு வந்து பரபரப்பை கிளப்பியிருந்தார். அசோக் கெலாட்டை அம்பலப்படுத்தும் பல அதிர்ச்சி தகவல்கள் அதில் இருப்பதாக அவர் கூறியிருந்தார். 

பொதுக்கூட்டத்தில் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, "அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான கேள்வித்தாள்களை கசியவிட்ட மாஃபியா ராஜஸ்தானில் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளது. அவர்கள் நீதி கோரி வருகின்றனர். ரேட் டைரியில் காங்கிரஸின் ஒவ்வொரு கறுப்பு ஊழலும் உள்ளது. அதை அம்பலப்படுத்த, மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "The Vaccine War படம் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்தியாவில் கொரோனாவை எதிர்த்துப் போராட நம் நாட்டு விஞ்ஞானிகள் இரவும் பகலும் கடுமையாக உழைத்தார்கள். இவையெல்லாம் அந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தப் படத்தைத் தயாரித்து விஞ்ஞானிகளுக்கும் அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தைத் தயாரித்தவர்களை நான் வாழ்த்துகிறேன்" என்றார்.

இதையும் படிக்க: The Vaccine War Review: தேசப்பற்று.. கொஞ்சம் வதந்தி.. கொஞ்சம் பிரச்சாரம்.. கொஞ்சம் உணர்ச்சிகள்.. வாக்ஸின் வார் திரைப்பட விமர்சனம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவிஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Embed widget