TN Rain Update: தமிழ்நாட்டிற்கு இன்று லீவா? எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
TN Rain Update: சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு இன்று லீவா?
ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து தமிழக மக்கள் இன்னும் மீளமுடியவில்லை. கடலூர், கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் சேலம் போன்ற மாவட்டங்கள் ஏராளமான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தஞ்சமடைந்துள்ளனர். பல பகுதிகள் நீர் சூழ்ந்து தனித்தீவுகளாக மாறியுள்ளதால், இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு ஏதும் வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தேங்கியுள்ள நீர் வடிந்து, விரைவில் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை நிலவரம்
மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது தற்போது கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக,
மழை எச்சரிக்கை
04-12-2024: தமிழகத்தில் கத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-12-2024 முதல் 09-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
04-12-2024: லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மண மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05-12-2024: மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
06-12-2024: தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07-12-2024: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.