TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(12-12-25) மின் தடை ஏற்படும் பகுதிகள்.. உங்கள் ஊரில் மின்வெட்டு உண்டா? முழு விவரம்
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை (12.12.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளை(12-12-25) எங்கெல்லாம் மின் தடை:
கிருஷ்ணகிரி
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், சிம்ப்ளெரடி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பத்தகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவரசனப்பள்ளி பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெடபள்ளி, சென்னப்பள்ளி
சேலம்
பள்ளபட்டி, 3 ரோடு, போடிநாயக்கன்பட்டி, திருவகவுண்டனூர் புறவழிச்சாலை, அம்மாச்சி நகர், சுந்தரம் காலனி புதிய பேருந்து நிலையம், கோகுலம் மருத்துவமனை, தெற்கு ஆலாபுரம், ஸ்வர்ணபுரி, 5 ரோடு, ஸீட் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி
பெரம்பலூர்
அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர்
திருப்பூர்
உடுமலை பகுதியில் பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளிர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாலமணன்சோலை, லட்சுமிபுரம்
கோவை
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி.நகர், கணுவாய். புதூர், தடாகம் சாலை, சோமயம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் தொழிற்பேட்டை, லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர்
ஈரோடு
நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.






















