மேலும் அறிய

பைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் தை ரகசியம்: தமிழ் புத்தாண்டை மாற்ற புதிய அரசு முடிவு?

இப்போது உலா வரும் பைகள் போல மூன்று விதமான பைகள் அச்சிட கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று சொல்லி அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடுவதும், திமுகவை பொறுத்தவரை தை முதல் நாளான பொங்கல் விழா தினமே தமிழ் புத்தாண்டு நாள் என அறிவித்து கொண்டாடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்களை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டார். அதில், சித்திரை 1ஆம் தேதியான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. திமுகவை பொறுத்தவரை தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டு என கொண்டாடி வரும் நிலையில், திமுக அரசு ஏன் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதோடு, சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பதை திமுக அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதா என கேட்டு பலரும் சந்தேகம் எழுப்பினர்.

பைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் தை ரகசியம்: தமிழ் புத்தாண்டை மாற்ற புதிய அரசு முடிவு?

இது குறித்து தலைமைச் செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல்வராக இருந்த ஜெயலலிதா புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்து ரத்து செய்தார்.  அதன்படி, சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அவர் அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில், இந்த சட்டமே அமலில் இருந்து வருகிறது. அதனால், அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாளாக அறிவித்து அன்று விடுமுறையை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார் என விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கும் பை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலுக்கான காரணம், அந்தப் பையில், இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் என அச்சிடப்பட்டுள்ளது. இதனால், தை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

சித்திரை 1 தமிழ் புத்தாண்டு என்ற சட்டம் இருக்கும்போது, அந்த சட்டம் வரும் பேரவை தொடரில் மாற்றி அமைக்கப்பட்டு தை 1 தமிழ் புத்தாண்டு என்று கொண்டாட புதிய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் விரைவில் அறிக்கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். அப்படி கொடுத்தால் பொங்கல் பொருட்கள் வழங்கும் பையில் தமிழ் புத்தாண்டு என அச்சிடப்பட்டிருக்கும் இல்லையென்றால் சாதாரண பைதான் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்போது உலா வரும் பைகள் போல மூன்று விதமான பைகள் அச்சிட கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வந்துள்ளது.

மேலும், அந்தப் புதிய பையில், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறாதை கண்டு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget