(Source: ECI/ABP News/ABP Majha)
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக்கூட்டம்: 6 முக்கிய முடிவுகள் என்னென்ன?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சில முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகர்ப்புறத்துறை, ஊரக வளர்ச்சி துறைகள் இணைந்துசெயல்பட வேண்டும், ரெம்டெசிவிர் மருந்து மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வழிசெய்ய வேண்டும், ரெம்டெசிவரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல் அமைச்சரவையின் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் அனைத்தும் கொரோனாவை மையமாகவே வைத்து நடந்துள்ளது.
முன்னதாக கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பொது மக்கள் அச்சம் தவிர்த்து, முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி முழுமையான விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கினால், நாம் விரைவில் இந்தக் கடுமையான சோதனையிலிருந்து வெளிவந்து, ஆக்கப்பூர்வமாக நற்பணிகள் ஆற்ற முடியும்; கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஒளியின் வேகத்தில் எடுக்கப்படும் என்பதை உறுதிகூற விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டார்