மேலும் அறிய

மீண்டும் தமிழகத்தில் மும்மொழி கொள்கையா..? தமிழக ஆளுநர் பேச்சு..வலுக்கும் எதிர்ப்புகள்..!

உலகின் பழமையான மொழி தமிழ் என்று குறிப்பிட்ட தமிழக ஆளுநர், அதே நேரத்தில் இங்குள்ள மாணவர்கள் பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், தமிழ்நாட்டில் சென்னை கோட்டையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தேசிய கொடியை ஏற்றினர். கொடி ஏற்றிய பிறகு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மாணவர்கள் புதிய மொழிகளைக் கற்குமாறு  வலியுறுத்தினார். 

இதையடுத்து, ஆளுநர் பேசியது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்த அவரது நிலைப்பாடு என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (புதன்கிழமை) நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இரு மொழிக் கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சி.என்.அண்ணாதுரை (திமுகவின் முதல் முதல்வர் 1967ல்) காலம் முதல் கடைப்பிடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் (NEP), 2020ன் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறோம். 

எங்களின் இருமொழிக் கொள்கையிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். தேசிய கல்விக் கொள்கையில் நான்கு முக்கிய குறிப்புகளை எதிர்த்து வருகிறோம். அதில் இந்த மும்மொழிக் கொள்கையையும் ஒன்று" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான முந்தைய ஆட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தாலும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தது. கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடுவதாகக் கூறியதுடன், தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தது. இதற்கிடையில் மத்திய, மாநில அரசுக்கு இதுகுறித்து தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்துவரும் வேளையில் தமிழக ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

கடந்த செவ்வாய்க்கிழமை, உலகின் பழமையான மொழி தமிழ் என்று குறிப்பிட்ட தமிழக ஆளுநர், அதே நேரத்தில் இங்குள்ள மாணவர்கள் பிற மொழிகளையும் கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "நாட்டின் பிற பகுதிகளில் தமிழ் மொழி பரவலாகப் பரவுவது முக்கியம் என்றாலும், மற்ற மாநில மாணவர்களைப் போலவே, இங்குள்ள பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்வதும் முக்கியம்" என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் “நம் மாணவர்களுக்கு மற்ற இந்திய மொழிகளின் அறிவைப் பறிப்பது அனைவருக்கும் அநீதியானது. சகோதரத்துவம் மற்றும் சிறந்த பரஸ்பர பாராட்டுகளை வளர்ப்பது மட்டுமல்லாமல், மொழியியல் அறிவுசார் மற்றும் கலாச்சார அறிவையும் நம் அனைவரையும் வளப்படுத்துவதோடு, நமது இணக்கமான வளர்ச்சிக்கான பல வாய்ப்புகளையும் திறக்கும்” என்றார். 

மீண்டும் தமிழகத்தில் மும்மொழி கொள்கையா..? தமிழக ஆளுநர் பேச்சு..வலுக்கும் எதிர்ப்புகள்..!

தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது மொழித் தியாகிகளின் தியாகம் குறித்த மெய்நிகர் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாங்கள் இந்தியை ஒருபோதும் எதிர்க்கவில்லை. நாங்கள் இந்தி ஆதிக்கத்தையும் திணிப்பையும் எதிர்க்கிறோம், மொழியை அல்ல. நாங்கள் தமிழை விரும்புபவர்கள், ஆனால் எந்த மொழியையும் வெறுப்பவர்கள் அல்ல என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முந்தைய அதிமுக கோரிக்கை வைத்தது, ஆனால் அந்த மசோதா குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2020 இல், அப்போதைய அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்தும் பேசிய ஆளுநர்,“அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் உறுதியான நடவடிக்கைக்கு நன்றி, அந்த எண்ணிக்கை கணிசமாக மேம்பட்டுள்ளது. இருப்பினும், அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசரத் தேவையாக உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் திமுக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சட்டமன்றத்தில் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்றி ஆளுநரின் அறிக்கை அளித்தது. இந்த மசோதாவை 4 மாதங்களாக குடியரசு தலைவருக்கு அனுப்பாததற்காக ஆளுநர் ரவி ஏற்கனவே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Watch Video: பெட்ரோல் பங்க்.. வெடித்து சிதறிய சிஎன்ஜி டேங்கர் - பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழப்பு? வீடியோ வைரல்..!
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Embed widget