மேலும் அறிய

Salem Leopard: சிறுத்தையை கொன்றதற்கு இதுதான் காரணம்... கைதிகள் பரபரப்பு வாக்குமூலம்

20 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறை பிடிக்காததால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம் என வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர், பாலமலை, எடப்பாடி, காடையாம்பட்டி பகுதியில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில்,‌ கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை, கடந்த 3 மாதமாக மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய், கோழிகளை வேட்டையாடி வந்தது. 

குறிப்பாக, கடந்த 20 நாட்களாக மேட்டூர் பாலமலையை ஒட்டியிருக்கும் கொளத்தூர், குரும்பனூர், வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்கலம், கருங்கரடு உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்து, இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து வேட்டையாடியது. மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ஆகிய பகுதியில் இதுவரை 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும், 10 கோழிகளையும், 5 நாய்களையும் அந்த சிறுத்தை வேட்டையாடியுள்ளது.

Salem Leopard: சிறுத்தையை கொன்றதற்கு இதுதான் காரணம்... கைதிகள் பரபரப்பு வாக்குமூலம்

இந்த பகுதிகளில், மாவட்ட வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, சிறுத்தையை கண்காணித்து பிடிக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்தனர். தற்போது, கொளத்தூர், வெள்ளக்கரட்டூர், கருங்கரடு பகுதியில் 4 கூண்டுகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களை காட்டிற்குள் வைத்து, கண்காணித்து வந்தனர். தர்மபுரி மற்றும் ஈரோடு, சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு வனக்குழுவினர் வந்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த சிறுத்தை, கூண்டில் சிக்காமல் இருந்தது.

இந்நிலையில், மேட்டூர் பகுதியில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை உள்பட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் 10 சிறுத்தைகள் சுற்றி வருவதாகவும், இவை வனத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த 10 சிறுத்தைகளும், கடந்த ஓராண்டிற்கு முன்பு, மேட்டூர் அடுத்துள்ள பாலமலையில் தமிழக-கர்நாடக வன எல்லைப்பகுதியில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளால் விடப்பட்டவை என்றும், மேட்டூர் பகுதி மலைக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேட்டூர் பாலமலை பகுதியில், பாலாறு வழியாக கர்நாடக வனத்திற்குள் வேட்டைக்காரர்கள் ஊடுருவி, சந்தன மரங்களை வெட்டுவது, யானையை வேட்டையாடி தந்தம் கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். வேட்டைக்காரர்கள் ஊடுருவலை தடுக்க கர்நாடக வனத்துறையினர், மாநில எல்லையில் 10 சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து விட்டு விட்டார்கள். அந்த குட்டிகள் பெரிதாகி, தற்போது தமிழக வனத்தில் உலா வருவதோடு, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் முன்பு, பாலமலை மற்றும் சேர்வராயன் மலைத்தொடரில் சிறுத்தைகள் இல்லை. இங்கு யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட விலங்குகள் தான் அதிகளவு உள்ளன. தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், ஒருவேளை மக்கள் கூறும் குற்றச்சாட்டுப்படி, கர்நாடக வனத்துறையினர், 10 சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து தமிழக வனப்பகுதியில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

Salem Leopard: சிறுத்தையை கொன்றதற்கு இதுதான் காரணம்... கைதிகள் பரபரப்பு வாக்குமூலம்

கர்நாடகா வனத்துறை மீதான இக்குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஆனால், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து விட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. சிறுத்தையை பொறுத்தவரை அது ஒருநாளைக்கு 50 கி.மீ., தூரம் வரை பயணிக்கும். அதனால், அதுவாகவே பாலமலையின் மறுபக்கத்தில் கர்நாடகா பகுதியில் இருந்து வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், மக்கள் தெரிவித்துள்ள புகார் குறித்து, தீவிர கள விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சிறுத்தை மர்மமான முறையில் செத்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சேர்த்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அதே இடத்தில் எரிக்கப்பட்டது.

சிறுத்தையை கல்லால் தாக்கி பின்னர் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சிறுத்தையை சுட்டது யார் என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தின்னப்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் முனுசாமி உள்பட 3 பேர் கைது. சிறுத்தையை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற முனுசாமி, சசி, ராஜா ஆகியோரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதான முனுசாமி, சசி, ராஜா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணையில், அவர்கள் 3 பேரும் கடந்த 25 ஆம் தேதி அதிகாலையில் சிறுத்தை இருக்கும் இடத்தை கண்டறிந்து, சிறுத்தையை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் இறந்து விட்டதா என அறிந்துகொள்ள அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது லேசாக உயிர் இருந்துள்ளது. உடனடியாக கட்டையால் சிறுத்தையை தலையில் அடித்து கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது. 20 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறை பிடிக்காததால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம் என அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைதான முனுசாமி, சசி, ராஜா ஆகிய 3 பேரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் மேட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget