மேலும் அறிய

’தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தினாலும் அது தவறில்லை’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

’’தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமா? அவசியமில்லையா என்ற செய்தியாளரின் கேள்விக்கு உயிரோடு இருப்பது அவசியமா? அவசியமில்லையா? என்று பதில்’’

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 682 பேர் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 161 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் தற்போது மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு கொரோனா சிகிச்சை மையங்களில்  219 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 302 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 9 லட்சத்து 81 ஆயிரத்து 82 பேர். இதில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தகுதியுடைய நபர்கள் 7 லட்சத்து 61 ஆயிரத்து 320 பேர் உள்ளனர்.  இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 432 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

’தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தினாலும் அது தவறில்லை’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 504 இடங்களில் நேற்று நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மயிலாடுதுறை தாலுக்கா உழுத்துக்குப்பை ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். தொடர்ந்து,  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மேலும் மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

’தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தினாலும் அது தவறில்லை’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது, தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தடுப்பூசி மெகா முகாமில் 15 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் மாலை 04:30 மணி வரை இலக்கினை கடந்து  18 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். என்றார். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி கட்டாயமா? கட்டாயம் இல்லையா என்ற செய்தியாளரின் கேள்விக்கு மக்கள் உயிரோடு இருப்பது அவசியமா? அவசியம் இல்லையா? என்ற கேள்வியை போன்று உள்ளது  எனக்கூறிய அமைச்சர், மக்கள் நோயின்றி வாழ தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது. 

’தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தினாலும் அது தவறில்லை’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

நாம் தற்போது இருக்கின்ற இந்த இக்கட்டான காலத்தில் உலக அளவில் தடுப்பூசி போட்டு கொள்வது மட்டும்தான் தீர்வாக உள்ளது. மக்களின் நல்வாழ்வுக்காக தடுப்பூசி போடுங்கள் வேண்டும் என்றும், கட்டாயப்படுத்தினாலும் அது தவறில்லை என தெரிவித்தார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா. முருகன், மயிலாடுதுறை சட்டபேரவை உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget