மேலும் அறிய
கரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி நூலகங்களை வழங்கிய ஆட்சியர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பயிற்சி நூல்களை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 40 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக 9 அறிவுசார் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பயிற்சி நூல்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டத்தை சேர்ந்த அஞ்சலைதேவி, சாரதா அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அன்புமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சியர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஆட்டோ
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement