கரூரில் கோவில் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை
இரண்டு பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இதனால் தனிமையில் வாழ்ந்து வந்த மாதவன் மனமுடைந்து காணப்பட்டார்.
குடும்பத்தகராறில் பரிதாபம்:
கரூரில் குடும்ப தகராறில் கோவில் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் காவலாளி:-
கரூர் தாந்தோணிமலை தெற்கு தெருவை சேர்ந்த மாதவன் வயது 45. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனா. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இதனால் தனிமையில் வாழ்ந்து வந்த மாதவன் மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை:- இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் மாதவனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாதவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தற்கொலை குறித்த புகாரின் பேரில், தான்தோன்றி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாலை பணியாளர்கள் தர்ணா போராட்டம்.
கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களை சங்கத்தின் கரூர் மாவட்டம் சார்பில் கர்ணா போராட்டம் நடைபெற்றது. தலையில் முக்காடு அணிந்து கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செவந்தி லிங்கம் தலைமை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ரூபாய் 5200,20,000 தர ஊதியம் 1900 என்ற அடிப்படையில் வழங்கிட வேண்டும். என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
பாஜக மாநில நிர்வாகி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடியதாக பாஜக மாநில நிர்வாகி உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பில் தேங்காயையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கரூர் மாவட்ட பாஜக விவசாய அணியின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு குவிந்தனர் இந்த இடத்தில் போராட்டம் நடந்த அனுமதி இல்லை என போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதனால் போலீசார் பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் விஏஓ அங்கு ராஜ் புகாரின் பேரில் டவுன் போலீசார் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் மாவட்ட விவசாய அணி தலைவர் அக்னீஸ்வரர் செல்வம் துணை தலைவர் செல்வர் மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.