மேலும் அறிய

TASMAC : மதுபான சில்லறை விற்பனை கடைகளில், அதிக அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது : தமிழ்நாடு அரசு

மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள், மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகமான அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படும் 27 மாவட்டங்களில் வரும்  ஜூன் 14 முதல் 21 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் லிமிடெட், சென்னை மேலாண்மை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரைகளை தவறாது கடைபிடிக்குமாறு மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட நிலையான இயக்க நெறிமுறைகளில்: 

  • மாவட்டத்தில் தற்பொழுது செயல்பட்டுவரும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணியில் இருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கோவிட்.19 கொரானா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முழுமையாக கடைபிடிக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த (medically fit person and without any co-morbid condition) 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் முன்புறம் மதுபானம் வாங்கவரும் நபர்களின் கூட்டத்தை இரண்டு பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
  • மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக்கூடாது.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும் பொழுதும் மூடும் பொழுதும் உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி (user friendly disinfectant liquid) கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் ஒரு நாளைக்கு இரண்டு முறை தெளிக்கவேண்டும்.
  • மதுபானம் வாங்க வரும் நபர்கள் நின்று வரிசையில் வருவதற்காக 1 அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் சுட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும், கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணியாளர் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முகக்கவசம் (TRIPLE LAYER MASK), ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கையுறை (disposable hand gloves) ஆகியவற்றினை பயன்படுத்தவேண்டும்.
  • குறைந்த பட்சம் இரண்டு பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனைக் கடையின் வெளிப்புறம் நின்று மதுபானம் வாங்க வரும் நபர்கள் சமூக இடைவெளியுடன் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் முகக்கவசம் அணிந்துள்ளனரா? என்பதனை கண்காணிக்கவும் வேண்டும்.

TASMAC : மதுபான சில்லறை விற்பனை கடைகளில், அதிக அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது : தமிழ்நாடு அரசு

  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் நுழைவாயிலில் ஒரு பணியாளர் மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிட்டைசர் வழங்கிய பின்னர் மதுபான சில்லறை விற்பனைக் கடைக்குள் அனுமதிக்கும் பணியினை கட்டாயம் செய்யவேண்டும்.
  • மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிட்டைசர் வழங்கும் பணியாளர் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முகக்கவசம் (TRIPLE LAYER MASK), ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கையுறை (disposabie hand gloves) ஆகியவற்றினை பயன்படுத்தவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள் மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகமான அளவில் மதுபானங்கள் வழங்கக்கூடாது (No Bulk Sales to be done).
  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையினை கட்டாயம் மாலை 5.00 மணிக்குள் முடித்திருக்கவேண்டும்.
  • மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையின்பொழுது சமூக ஆர்வலர்களை பணிக்கு (VOLUNTEERS) பயத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tasmac Shops in Tamil Nadu: ‛ஆட்சி மாறியும் காட்சி மாறலயே’ டாஸ்மாக் திறப்புக்கு ராமதாஸ் கண்டனம்

”மேற்கண்ட அறிவுரைகளை சரியாக பின்பற்றாமலும், பணிக்கு வராமலும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tasmac Shop Opening: டாஸ்மாக் திறந்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Breaking News LIVE: அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
Embed widget