Polio: இதை முதல்ல படிங்க..! தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து.!
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது.
நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதை பொறுத்தவரை தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
போலியோ சொட்டு மருந்து
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6வது வாரத்திலும், 14வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6வது வாரத்திலும், 14வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும், 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
04.01.2023 முதல் கூடுதல் தவணை போலியோ தடுப்பூசி
— Directorate of Public Health & Preventive Medicine (@TNDPHPM) January 3, 2023
Additional Dose fIPV - Inactivated Polio Vaccine
Full Video Link 👉 https://t.co/Nl9jnA4uzk@CMOTamilnadu @Subramanian_ma @DrSelvaTN @UNICEFIndia @pibchennai @chennaicorp @UNDP_India @icmrnirt1 @TNCoronaUpdate @who pic.twitter.com/z049tyiCFV
சிறப்பு முகாம்:
தமிழ்நாட்டில் போலியோவின் தாக்கம் இல்லாவிட்டாலும் பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ தடுப்பூசி வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்களில் போலியோ தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்களிலும் போலியோ சொட்டு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: J&J License: கோவிட்-19 காலத்தில் அரசு செயல்படவில்லையா? ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி
மேலும் படிக்க: Heeraben Modi: தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அறிவோம்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்