J&J License: கோவிட்-19 காலத்தில் அரசு செயல்படவில்லையா? ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி
ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்புகளின் உரிமத்தை ரத்து செய்வதில் ஏன் 2 ஆண்டுகள் தாமதம் என மகாராஷ்டிரா அரசாங்கத்தை மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
![J&J License: கோவிட்-19 காலத்தில் அரசு செயல்படவில்லையா? ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி Johnson and Johnson licence cancellation Bombay High Court questioned Maharashtra Govt on delayed action J&J License: கோவிட்-19 காலத்தில் அரசு செயல்படவில்லையா? ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/e7ef1e3876fdc6616367cf02901f30ee1672750246872571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கு பயன்படுத்த கூடிய பவுடர் தொடர்பாக புனே மற்றும் நாசிக்கில் எடுக்கப்பட்ட மாதிரிகள், தரமானது இல்லை என்றும் புற்றுநோய்க்கான கூற்றுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்பதற்கான உரிமத்தை, மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு:
இதையடுத்து, மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஏன் தாமதம்:
சோதனைகளின் முடிவுகள் 2019 ஆம் ஆண்டில் கிடைத்த போதிலும் நடவடிக்கை எடுப்பதில் உள்ள தாமதத்திற்கு காரணம் என்ன அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், குழந்தைகளுக்கு அபாயகரமாக பொருட்களை தடை செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம் என நீதிபதிகள் கேட்டறிந்தனர்
அதற்கு,கோவிட்-19 காரணமாக, விரைவான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். எனினும், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
நீதிமன்றம் கேள்வி:
"நீங்கள் குழந்தை நலனை கையாளுகிறீர்கள் என்றால், நீங்கள் 48 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், 2 ஆண்டுகள் அல்ல என்ற நீதிபதி தெரிவித்தார்.
கோவிட்-19 காலத்தில் உலகம் பூட்டப்பட்டதா என்றும் மகாராஷ்டிரா அரசு நவம்பர் 2019 முதல் செப்டம்பர் 2022 வரை செயல்படாமல் இருந்ததா என்றும், நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்? இதுதானே உங்க அவசர உணர்வு என்று கேள்வி எழுப்பினர். மேலும் தாமதம் குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர்
Johnson's Baby Powder वर बंदी घालण्यास दोन वर्ष का लागली?, हायकोर्टाचा राज्य सरकारला सवाल https://t.co/S5oiH9uF3i @ameyrane85 #JohnsonsBabyPowder #Johnson&Johnson #BombayHighCourt
— ABP माझा (@abpmajhatv) January 3, 2023
ஒத்திவைப்பு:
மேலும், "நீங்கள் மேற்கொண்டு சென்று புதிய மாதிரிகளை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால், தற்போதுள்ள விதிகளுக்கு உட்பட்டு எடுத்து கொள்ளுங்கள் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு தொடர்ந்து இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)