மேலும் அறிய

Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு இன்று முதல் வரும் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்களை கீழே காணலாம்.

   கேள்வி : தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதா?

   பதில்     :  தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் 28-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

   கேள்வி : புதிய ஊரடங்கு எவ்வாறு அமல்படுத்தப்பட உளளது?

   பதில் : தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

   கேள்வி : எந்தெந்த மாவட்டங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

   பதில் : கொரோனா பாதிப்பு ஏற்கனவே அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் முதல் வகையாகவும், தொற்று பாதிப்பு     ஓரளவு குறைவாக உள்ள 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாகவும், தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள 4           மாவட்டங்கள் மூன்றாவது வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

    கேள்வி : முதல் வகை மாவட்டங்கள் எவை?

    பதில் :  கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

    கேள்வி : இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்கள் எவை?

    பதில் : அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை,     பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்களை, தேனி, தென்காசி, திருநெல்வேலி,   திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடில திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்.

Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

   கேள்வி : எந்த மாவட்டங்கள் மூன்றாவது வகையில் உள்ளது?

     பதில் : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.

  கேள்வி : முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களில் ஏதேனும் புதிய தளர்வுகள் உள்ளதா?

    பதில் : முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களுக்கு எந்தவித புதிய தளர்வுகளும் இல்லை. ஏற்கனவே     உள்ள அதே கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர உள்ளது.

   கேள்வி : இரண்டாவது வகை மாவட்டங்களில் ஏதேனும் புதிய தளர்வுகள் உண்டா?

     பதில் : வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல   அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2       பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

    கேள்வி : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எவற்றுக்கு அனுமதி?

     பதில் : குழந்தைகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,   ஆதரவற்றோர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவு இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கண்காணிப்பு/ பராமரிப்பு, சீர்த்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர். 

Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

    கேள்வி : போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?

    பதில் : மூன்றாவது வகை மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கேள்வி : சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுமா?

பதில் : ஆம். சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் நலன் கருதி காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

கேள்வி : சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு முறை உண்டா?

பதில் : வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர். 

Tamilnadu Lockdown Extension | ஊரடங்கு தளர்வுகள் : அதிகமாக எழும் கேள்விகளும்.. அதற்கான பதில்களும்..!

கேள்வி : திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி உண்டா?

பதில் : முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இ-பதிவு மாவட்ட நிர்வாகங்களால் வழங்கப்படாது. இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்கள் மற்றும் மூன்றாவது வகையில் உள்ள 4 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இ-பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : சுற்றுலா தளங்கள் செல்ல இ-பதிவு வழங்கப்படுமா?

பதில் : நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு வழங்க அனுமதிக்கப்படும்.

தலைப்பு செய்திகள்

7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
முதல் நாள் ரத்து, அடுத்த நாள் வாபஸ்: மின்பேருந்து டெண்டர் குழப்பம் குறித்து அன்புமணி கேள்வி
முதல் நாள் ரத்து, அடுத்த நாள் வாபஸ்: மின்பேருந்து டெண்டர் குழப்பம் குறித்து அன்புமணி கேள்வி
Nellai Kavin Murder Case 'கவின் ஆணவ படுகொலை வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு’ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
Nellai Kavin Murder Case 'கவின் ஆணவ படுகொலை வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு’ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Embed widget