TN Headlines: பெட்ரோல் குண்டுவீச்சு முதல்வர் விளக்கம்.. தேவர் ஜெயந்தி பூஜை- இதோ தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்!
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
- சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம்” - முத்துராமலிங்க தேவரை நினைவுக்கூறும் அரசியல் கட்சி தலைவர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார்.மேலும் படிக்க: “சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம்” - முத்துராமலிங்க தேவரை நினைவுக்கூறும் அரசியல் கட்சி தலைவர்கள்
-
ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசப்படவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் தடாலடி..!
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "தேவர் திருமகனார் என அறிஞர் அண்ணா அவரை அன்போடு அழைக்க தொடங்கினார்.மேலும் படிக்க: Thevar Jayanthi: ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசப்படவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் தடாலடி..!
-
விசாரணை வளையத்திற்குள் வரும் கருக்கா வினோத்.. 3 நாள் காவலில் எடுக்க அனுமதி..
ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த வாரம் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். மேலும் படிக்க: விசாரணை வளையத்திற்குள் வரும் கருக்கா வினோத்.. 3 நாள் காவலில் எடுக்க அனுமதி..
-
இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு!
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கு!
-
மாற்றுத் திறனாளிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ரசிகர்கள்..! காஞ்சியில் நடந்த சுவாரசியம்..!
நடிகர் விஜய் நடித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லியோ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.பி.கே தென்னரசு ஏற்பாட்டின் பேரில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 70-கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காஞ்சிபுரத்தில் உள்ள பாபு திரையரங்கிற்கு வரவழைத்து திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் படிங்க: மாற்றுத் திறனாளிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ரசிகர்கள்..! காஞ்சியில் நடந்த சுவாரசியம்..!