மாற்றுத் திறனாளிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ரசிகர்கள்..! காஞ்சியில் நடந்த சுவாரசியம்..!
லியோ படத்தின் வெற்றியை, மாற்றுத்திறனாளிகளை மகிழ்வித்து, காஞ்சிபுரம் திரையரங்கில் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
Leo Success Meet: இன்னொரு ஏமாற்றம்? லியோ வெற்றிவிழாவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்: காவல்துறையின் அதிரடி கேள்விகள்
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியான லியோ பத்து நாட்களில் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் லியோ படத்தின் வெற்றிவிழா குறித்த தகவல் வந்தது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். இந்த தகவலின் படி நவம்பர் 1 ஆம் தேதி லியோ படத்தின் வெற்றிவிழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
விரைவில் தகவல்
நேற்று சென்னையில் நடைபெற்ற ஜப்பான் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். லியோ படத்தின் இரண்டாம் பாதி மீதான விமர்சனத்தை தான் ஏற்றுக் கொள்வதாகவும் தன்னுடைய அடுத்தப் படத்தில் கவனமாக இருப்பேன் என்றும் லோகேஷ் தெரிவித்தார். மேலும் படம் குறித்த கேள்விகளுக்கு விரைவில் தான் நேர்காணல்கள் வழங்க இருப்பதாகவும் கூறினார். லியோ படத்தின் வெற்றிவிழா குறித்த தகவல்களை விரைவில் உறுதி செய்து அறிவிக்கப் படும் என்று அவர் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இசைவெளியீட்டு விழாவில் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
முன்னதாக லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப் பட்டு அதிகப்படியான கூட்டம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கல் பெரும் ஏமாற்றமடைந்தார்கள். தற்போது லியோ படத்தின் வெற்றி விழா இந்த குறையைப் போக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இப்படியான நிலையில் லியோ வெற்றிவிழா நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழு திட்டமிட்டிருக்கிறது என்று காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. விதிமுறைகளை காவல்துறை படக்குழுவுக்கு வலியுறுத்தி இருக்கிறது. லியோ இசைவெளியீட்டில் ஏமாற்றமடைந்த ரசிகர்களை திருப்திபடுத்த இந்த முறை எப்படியாவது படக்குழு வெற்றி விழாவை நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.