TN Headlines: 7 நாட்களுக்கு தொடரும் மழை; பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - முக்கிய செய்திகள்
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- TN Rain Alert: அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை.. எந்த பகுதிகளில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
05.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.10.2023 மற்றும் 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- Ttf Vasan: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கை எரித்துவிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக்கை எரித்துவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பிரபல யூட்யூபில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு விசாரணை கார்த்திகேயன் தலைமையில் வந்தது. அப்பொழுது போலீசார் தரப்பு விளக்கம் கேட்டு மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். இதுபோன்று சாகசங்களில் ஈடுபடுவது தவறு, அந்த பைக்கை எரித்து விட வேண்டும் என காட்டமான விமர்சனத்தை முன் வைத்தார் நீதிபதி கார்த்திகேயன். மேலும் படிக்க
- Teachers Protest: பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் திடீர் வாபஸ்; என்ன காரணம்?
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக பள்ளிக் கல்வி இயக்குநர் வளாகத்தில் நடத்தி வந்த போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஸின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும், தேவைப்படும்போது அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆதரவுடன் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. மேலும் படிக்க
- EPS: கைது செய்த ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் படிக்க
- IT Raid: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு - ரூ.200 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
சென்னையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் விடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகன் அந்த வீட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தியாகராய நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஓட்டலிலும், வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க