மேலும் அறிய

EPS: கைது செய்த ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் டெட் ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 

மேலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வந்தது.  ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் இன்று காலை போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில், “எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதல்வர், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர், அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் , வன்மையாக கண்டிக்கிறேன். 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன் என்று பொய்யை சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்”  என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget