TN Rain Alert: அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் மழை.. எந்த பகுதிகளில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06.10.2023 மற்றும் 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.10.2023 மற்றும் 11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) தலா 5, திரு.வி.கே.நகர் (சென்னை), கொட்டாரம் (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), கன்னியாகுமரி, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெரம்பூர் (சென்னை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (மதுரை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 3, தாம்பரம் (செங்கல்பட்டு), அண்ணாநகர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், நிலக்கோட்டை (சென்னை), இந்துஸ்தான் பல்கலை ARG (காஞ்சிபுரம்), அடையாமடை (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), பாபநாசம் (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), செய்யார் (திருவண்ணாமலை), போளூர் (திருவண்ணாமலை) தலா 2, VIT சென்னை AWS (செங்கல்பட்டு), ஆலந்தூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), மாதவரம் (சென்னை), ராயபுரம் (சென்னை), கொளத்தூர் (சென்னை), தேனாம்பேட்டை (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), ஐஸ் ஹவுஸ் (சென்னை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பாலமோர் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), புழல் ARG (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வேலூர் (வேலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.