TN Headlines: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி, கமல் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Vijayakanth Death: 'மனிதநேயத்தோடு இருக்கும் ஒரு அரசியல்வாதி விஜயகாந்த்’ - அஞ்சலி செலுத்திய பின் நிர்மலா சீதாராமன்..
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. நேற்று காலை நுரையீரல் அழற்சி காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் படிக்க
- Newyear Chennai Traffic: புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை கடற்கரை, முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றங்கள்
31.12.2023 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை. எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது. ”உயிரிழப்பு இல்லா புத்தாண்டிற்கு முன்னாள்" என்ற நோக்கத்துடன் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் படிக்க
- TN Rain Alert: அடுத்த சில தினங்களுக்கு இப்படிதான்.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்?
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- Kamal On Vijayakanth : விஜயகாந்தின் கோபத்திற்கு ரசிகன் நான் - மனபாரத்துடன் நேரில் அஞ்சலி செலுத்திய கமல்...
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு, கமல்ஹாசன் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தை நோக்கி, கைகளை கூப்பி கணத்த இதயத்துடன் வணங்கினார். முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “எளிமை, நட்பு, உழைப்பு மற்றும் பெருந்தன்மை ஆகிய அத்தனை வார்த்தைகளையும் சேர்த்து ஒரே மனிதருக்கு கூற வேண்டுமானால் அது சகோதரர் விஜயகாந்திற்கு மட்டுமே பொருந்தும். மேலும் படிக்க
- Vijayakanth Death: 'விஜயகாந்த் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும்’ - அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த்..
சென்னை தீவித்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க