மேலும் அறிய

Kamal On Vijayakanth : விஜயகாந்தின் கோபத்திற்கு ரசிகன் நான் - மனபாரத்துடன் நேரில் அஞ்சலி செலுத்திய கமல்...

Kamal On Rajni: விஜயகாந்தின் கோபத்திற்கு ரசிகன் நான் என அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிறகு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு, கமல்ஹாசன் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.  கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தை நோக்கி, கைகளை கூப்பி கணத்த இதயத்துடன் வணங்கினார். முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

”விஜயகாந்தின் கோபத்திற்கு ரசிகன் நான் - கமல்”

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “எளிமை, நட்பு, உழைப்பு மற்றும் பெருந்தன்மை ஆகிய அத்தனை வார்த்தைகளையும் சேர்த்து ஒரே மனிதருக்கு கூற வேண்டுமானால் அது சகோதரர் விஜயகாந்திற்கு மட்டுமே பொருந்தும். ஆரம்பத்தில் நான்  இவரை பார்க்கும்போது எப்படி என்னிடம் பழகினாரோ, அதேமாதிரி தான் இவ்வளவு பெரிய நட்சத்திரமாக மாறிய பிறகும் என்னிடம் பேசினார். இவரிடம் எந்த அளவிற்கு பணிவு இருக்கிறதோ, அதே அளவிலான நியாயமான கோபமும் இருக்கும். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கே வந்தார் என நான் நம்புகிறேன். இப்படிபட்ட நேர்மையாளர்களை இழந்து இருப்பது என்னை போன்ற ஆட்களுக்கு ஒருவித தனிமை தான். நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு நான் செல்கிறேன்” என கமல்ஹாசன் கூறினார்.

கமல் போட்ட டிவீட்:

முன்னதாக நேற்று கமல் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

விஜயகாந்த் மறைவு:

பிரபல நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜய்காந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் விஜய், ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, விஜயகாந்தின் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 4.45 மணியளவில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.